தன்னை விட 25 வயது குறைவான நடிகருடன் மோசமான காட்சியில் தபு - வைரலாகும் வீடியோ - விளாசும் ரசிகர்கள்..!


தமிழில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த “காதல் தேசம்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், “இருவர்”,” தாயின் மணிக்கொடி”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “சினேகிதியே”, ” டேவிட்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.இவருக்கு 48 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார். “திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. 

இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ என்று கூறியிருந்தார். 

நடிகைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் தபு. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் படுக்கயறை காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகவே நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.