பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது விஜய் டிவி நான்காவது சீசன்கான ஆட்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆட்களை விஜய் டிவி நிர்வாகம் எப்போதே தேர்வு செய்து விட்டதாகவும், எப்போதுமே ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை செப்டம்பர் மாத துவக்கத்தில் இருக்கலாம் எனவும் தெரிகிறது.
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் வழங்க உள்ளார். ஆனால் கடந்த முறை 15 கோடி சம்பளம் வாங்கிய கமலஹாசன் இந்த முறை 25 கோடி கேட்கிறாராம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொரோனா டெஸ்ட் முறையாக எடுக்கப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்புதான் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்களாம்.
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் முக்கிய நாயகிகளாக வலம் வரும் ரம்யா பாண்டியன், அதுல்யா போன்றோர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க டிக் டாக் ஆப்பில் கட்டுக்கடங்கா கவர்ச்சி ஆட்டம் போட்டு, சில பல சர்ச்சைகளில் சிக்கிய இலக்கியா என்பவர் பங்கு பெறுவது உருதியாகியுள்ளதாம்.
சமீபத்தில், சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சில இயக்குனர்கள் என்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடதக்கது.



