"என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மாதிரி.." - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..!

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 
 
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். 
 
அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை. 
 
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் குஷ்பு, தனது பழைய நினைவுகளை தூசு தட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே மகள்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய குஷ்பு, தானும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். 
 
அதன் விளைவு, சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மனதை கொள்ளையடிக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை குஷ்பு அவ்வப்போது அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 
 
அவரது அரசியல் ரீதியிலான கருத்துக்கள் காரணமாக அடிக்கடி செய்திகளிலும் அடிபட்டு வருகிறார்.மேலும் கணவர் நடத்தும் போட்டோ ஷூட், தானே எடுக்கும் செல்பி என அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து அசத்தி வருகிறார். 
 
அண்மையில் வீட்டில் மல்லாக்கப் படுத்தப்படி வில்லாக வளைந்து யோகா செய்த போட்டோக்களை ஷேர் செய்தனர்.இந்நிலையில், அவகேடோ பழத்தை அரைத்து முகத்தில் பூசிய படி ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,என்ன கன்றாவி இது.. கை குழந்தை கக்கா போன மாதிரி என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிரார்கள்.

"என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மாதிரி.." - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..! "என்ன கன்றாவி இது.. கைக்குழந்தை கக்கா போன மாதிரி.." - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உவ்வேக்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.