"பிகினி மேல் சுடிதார்.." - சமந்தாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள் - வைராலகும் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனனின் மகனான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பொதுவாக இந்த ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பெரும்பாலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்கள். ஆனால் அந்த வகையில் நடிகை சமந்தா வீட்டில் உருப்படியான வேலைகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வீட்டில் விவசாயம் செய்வது மற்றும் யோகா செய்வது ஆகியவற்றை வழக்கமாக செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் செய்யும் இந்த செயல்களை அனைத்தும் வீடியோ மூலமாக சமூகவலைத்தளத்தில் வெளியிவருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த செடிகளை பராமரிக்கும் சேலஞ்சை எம்பி சந்தோஷ் குமார் அவர்கள் நடிகை சமந்தாவுக்கு கொடுத்தாராம். அந்த சேலஞ்ச் வெற்றிகரமாக நிறைவேற்றிய நடிகை சமந்தா அவருடைய பங்காக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் ராஷ்மிகா மற்றும் தனது முக்கியமான ரசிகர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று செடிகளை அன்பளிப்பாக கொடுத்து அவற்றை பராமரிக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.
இந்நிலையில், தன்னுடையஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வயிறு முழுதும் தெரியும் படியான கவர்ச்சியான சுடிதார் அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.
இதனை பார்த்த ரசிகர்கள், பிகினி மேல் சுடிதார் போடுறது தான் இப்போ புது பேஷனா..? என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
"பிகினி மேல் சுடிதார்.." - சமந்தாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள் - வைராலகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
August 24, 2020
Rating:
