இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? - சுஹாசினி மேடமா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்.! - வைரலாகும் புகைப்படங்கள்..!


நடிகை சுஹாசினி நடிகர் சாருஹாசனின் மகளும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளும் ஆவார். இவருக்கு சினிமா பின்புலம் ஏற்கனவே இருந்தாலும், இவரது நடிப்பித் திறமையே இவருக்குத் தொடர் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தன.

1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கால் பதித்த இவருக்கு முதல்படமே ஹிட் ஆக, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பப் பாங்கான தோற்றத்தால், இவருக்கு இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்பப் பெண்களும் ரசிகர்களாகினர்.

இவர் கேமரா அசிஸ்டெண்ட், வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், இயக்குனர், தயாரிப்பாளர், வசன கர்த்தா எனப் பல ரோல்களிலும் வலம் வருகிறார். சிந்து பைரவி படத்தில் நடித்ததற்கு, இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கப் பெற்றது.

1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்குப் பின்னரும் சினிமாக்களில் தலைகாட்டிவரும் இவர், லாக்டவுன் நேரத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வந்தார்.

இந்தநிலையில் தற்போது சின்னஞ்சிறு கிளியே என்னும் பெயர் கொண்ட குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தில் மலையாள நடிகை ஆகானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன், கிருஷ்ணன், சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் தன்னுடைய ஐ போன் மூலமாக இந்த குறும்படத்தை இயக்கியதாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்திரா படத்தினை இயக்கிய இவர் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் ஆகியுள்ளார்.


இது ஒரு பக்கம் இருக்க, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சுஹாஷினி.


இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே சுஹாஷினா மேடமா இது..? இந்த வயசுலயும் இம்புட்டு ஹாட்டா போஸ் கொடுத்திருக்காங்க..? என்று வாயை
பிளந்து வருகிறார்கள்.


இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? - சுஹாசினி மேடமா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்.! - வைரலாகும் புகைப்படங்கள்..! இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..? - சுஹாசினி மேடமா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்.! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.