முதன் முறையாக மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்ட நாடோடிகள் நடிகை நாகு..! - வைரலாகும் புகைப்படம்..!


சரியாக சொன்னால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என வரிசையாக ஒவ்வோரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு குத்தாட்ட நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 

ஹீரோயின்கள் தங்கள் கேரக்டரில் மட்டும் அடக்க ஒடுக்கமாக வந்து போவார்கள். ஆனால், கடந்த பத்து ஆண்டு வாக்கில் படத்தில் நடித்த நடிகைகளே தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். 

அவர்களே கவர்ச்சி காட்டவும் தங்களை தயார்படுத்தினார்கள். இப்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவதை விட படத்தில் நடிக்காத இன்னொரு ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவது பாப்புலராகி உள்ளது. வெறும் நான்கு நாள் குத்தாட்ட ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் கொடுத்தால் குறைந்தது 25 லட்சம் சம்பளம் கிடைக்கும். 

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்து விட்டீர்களே என்று கேட்டால் அந்த இயக்குனர் எனக்கு நண்பர், அந்த ஹீரோ என்னுடைய நண்பர் அதனால் தான் ஒப்புக்கொண்டேன் என்று சப்பை கட்டு கட்டிவிட்டு நழுவும் நடிகைகளும் உண்டு.

இந்தி நடிகை நர்கீஸ் பக்கிரிக்கு இந்தியில் சம்பளம் ஒரு கோடி. அவர் சாஹசம் படத்தில் பிரசாந்துடன் ஆடிவிட்டு வாங்கியிருக்கும் சம்பளம் 30 லட்சம் என்கிறார்கள். இத்தனைக்கும் மூன்று நாட்கள்தான் வேலை. அவர் வந்து போன செலவு கணக்கு பத்து லட்சம் தனி. 

இப்படி ஹீரோயின்களே குத்தாட்டத்தையும் ஆடிவிடுவதால் குத்தாட்டைத்தையே நம்பி இருக்கும் ரிஷா, மைனா நாகு, சில ஆயிரங்களுக்காக ஆடும் தமிழ்நாடு ஆந்திரா டான்சர்கள், ஓரிரு லட்சங்களுக்கு ஆடும் மும்பை மாடல்கள் வேலை இழந்து நிற்கிறார்கள் என்பது தான் உண்மை. 


ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் குத்தாட்டம் போட்டு அசத்துகிறார்கள் நம்ம ஊர் குத்தாட்ட நடிகைகள். இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை சகிதமாகவே குத்தாட்டம் போட்டு வந்தார். 


ஆனால், இப்போது மாடர்ன் உடைக்கு மாறியுள்ளார். சமீபத்தில், நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.