உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை ஸ்ரத்தா கபூர் - ரசிகர்கள் ஷாக்..!


'மேயாத மான்' படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் 'ஆடை' . இந்த படத்திற்காக மிகவும் போல்டு ஆன கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருந்தார் அமலா பால். 

ஆடை திரைப்படம் பல்வேறு எதிர்ப்பு மற்றும் தடைகளுக்குப் பிறகு வெளியானது. படத்தில் அமலா பால் ஆடைஇன்றி நடித்திருக்கிறார் என்ற செய்தியே படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்தது.

அமலா பால் ஆடையின்றி நடித்ததை படம் ரிலீஸாவதற்கு முன்பு பலரும் விமர்ச்சித்தனர். ஆனால் படம் ரிலீஸான பிறகு அது அப்படியே உல்டாவாக மாறியது.

காரணம் அமலா பாலின் நடிப்பும் கடின உழைப்பும் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. படத்தை பார்த்தவர்கள் அமலா பாலை புகழ்ந்து தள்ளினர். 

அமலா பாலை தூற்றிய வாயெல்லாம் படம் வெளியான பிறகு போற்றியது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசிக்கி-2 என்ற திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்த ஸ்ரத்தா கபூர் சமீபத்தில் தெலுங்கில் பிரபாஸ் நப்பில் வெளியாகி படு தோல்வியடைந்த "சாஹோ" படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடை படத்தின் ரீமேக்கில் இவர் ஆடைகளை துறந்து நடிக்கவுள்ள தகவல் பாலிவுட் ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை ஸ்ரத்தா கபூர் - ரசிகர்கள் ஷாக்..! உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை ஸ்ரத்தா கபூர் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.