"இந்த வயதிலும் இப்படியா..?" - "நம்பவே முடியல.." - காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம்..! - வியக்கும் ரசிகர்கள்..!


காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 

சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார். மலையாள பட உலகில் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன். 

இவர் 2009-ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார். காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது. 

திலீப் - மஞ்சு வாரியார் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் காவ்யா மாதவன் தான் என ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தனர்.

இதன் பிறகு பிரபல நடிகையை திலிப் காரில் கடத்தி சென்று மோசமான முறையில் துன்புறுத்திய வழக்கில் சிக்கி சீக்கி அடித்தார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு துரிதமாக முடிக்கப்படும் சூழழில் கொரோனா தொற்று வந்து இடை மறித்து விட்டது. திலிப்பிற்கு எதிராக சாட்சி சொன்ன பலரும் தங்களுடைய சாட்சியில் இருந்து பின் வாங்கி விட்டார்கள் என்பதும் திலீப்பின் முன்னாள் மனைவியும், சமீபத்தில் அசுரன் படத்தில் ஹீரோயினாக நடித்தவருமான மஞ்சு வாரியார் தான் திலீப்பிற்கு எதிரான பல ஆவணங்களை கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், காவ்யா மாதவன் தன்னுடைய சமீபத்திய புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 35 வயதாகும் இவர் இன்னும் இளமையாகவே இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"இந்த வயதிலும் இப்படியா..?" - "நம்பவே முடியல.." - காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம்..! - வியக்கும் ரசிகர்கள்..! "இந்த வயதிலும் இப்படியா..?" - "நம்பவே முடியல.." - காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம்..! - வியக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.