லக்ஷ்மி என்ற குறும்படத்தில் கணவர் மற்றும் திடீரென சந்தித்த ஒருவருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்ததன் மூலம் பிரபலமானார் நடிகை லஷ்மி பிரியா.
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான லக்ஷ்மி பிரியா இயக்குநர் மகிழ்திருமேனியின் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் லக்ஷ்மி.
தமிழில் சுட்டக்கதை என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி பிரியா நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்திருந்தார்.
இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம். லக்ஷ்மி என்ற குறும்படத்தில் ரயிலில் அறிமுகமான நண்பருடன் சென்று அவரது அறையில் தங்குவது போன்ற கதையில் நடித்தார்.
தொடர்ந்து கணவருடன் படுக்கையறை காட்சியிலும் படு தைரியமாக நடித்திருப்பார் லக்ஷ்மி. யூட்யூப்பில் வெளியான இந்த குறும்படம் அதிக வியூஸ்களை அள்ளினாலும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
குறிப்பாக, படுக்கையறை காட்சியில் நடித்த லக்ஷ்மியின் கதாப்பாத்திரத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.சிலதிரைப்படங்களிலும் நடித்துள்ளார்லக்ஷ்மி ப்ரியா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" என்ற படம் இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்குகின்றது.





