"இப்படி போஸ் கொடுத்து கொரோனாவ போக சொன்னா எப்படி போகும்.." - இளசுகளை கிக் ஏற்றிய மஹிமா நம்பியார்..!


தமிழ் சினிமாவில் சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா. இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் கிட்ணா என்ற திரைப்படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் அசுரகுரு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் முதல் படமான சட்டை படத்திலேயே மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ஆனது மிகவும் சாதுவாக இருக்கும். இத்திரைப்படத்தை தொடர்ந்து மொசக்கட்டி, அகத்திணை போன்ற பல படங்களில் அவர் நடித்தார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அருண் விஜய் அவர்களுடன் நடிப்பில் வெளியான குற்றம் 23 என்ற திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகுதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் நடித்து கொண்டு தற்போது இவர் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

கடந்த வருடம் வெளியான மகாமுனி என்ற திரைப்படத்தின் மூலம் தான் எனக்கு நடிப்பது என்றால் என்னவென்று நான் புரிந்து கொண்டேன். அதுமட்டுமல்லாமல் நடிப்பே தெரியாமல் இருந்த எனக்கு எப்படி நடிப்பது என்று நான் மிகவும் கற்றுக்கொண்டேன்.

இந்த நிலையில் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எப்படி தன்னை முழுமையாக பொருத்திக் கொள்வது என்பதனையும் இத்திரைப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன் என்று அவர் கூறினார்.


சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் தற்போது அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


அந்த வகையில் தற்பொழுது விதவிதமான முக பாவனைகளை காட்டி க்ளோஸ் அப் போஸ் கொடுத்து அதனை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.