பிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..!


பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம், சூப்பராக முடிவடைந்த நிலையில் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது.சமீபத்தில், இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் அவ்வப்போது பிக்பாஸ் சீசன் 4 குறித்த பல்வேறு தகவல்கள் தினம் தோறும் வெளியாகி வருகிறது.அந்த வகையில், டிக் டாக் புகழ் இலக்கியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கும்பத்தோடு பிக்பாஸ் பார்ப்பவர்களை கருத்தில் கொண்டு, இவரால் ஏதேனும் பிரச்சனை வருமா என எண்ணி அவரை பிக்பாஸ் குழுவினர் வேண்டாம் என முடிவு செய்ததாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில், இதில் பாடகி சின்மயி கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இதனை சின்மயி மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியல் நான் கலந்து கொள்வதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். 
 
எனது பெயரை விளம்பரம் செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் சின்மயி. இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணனுமாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்க அடுத்த மாதம் (அக்டோபர்) நிகழ்ச்சி தொடங்கும் என பிக்பாஸ் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுது போக்கை வழங்குவதில் முனைப்புடன் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்ரிதா அய்யர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிக்பாஸ் கவினுடன் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அம்ரிதா அய்யர் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளவுள்ளார். ஏற்கனவே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளார் அம்ரிதா அய்யர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அம்ரிதாவுக்கு ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.

பிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..! பிக்பாஸ் 4-ல் பிகில் பட நடிகை - நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 14, 2020 Rating: 5
Powered by Blogger.