பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து லவ் ட்ராக் என்று ஒன்று ஓடிக்கொண்டே இருக்கின்றது. முதல் சீசனில் ஓவியா - ஆரவ். இரண்டாவது சீசனில் மஹத் - யாஷிகா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா என பல காதல் கதைகளை பார்த்து விட்டோம்.
இதில்
குறிபிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படி காதல் ட்ராக்கில்
இருப்பவர்களை நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை இருப்பார்கள். இதற்காகவோ
என்னவோ வம்படியாக காதல் கிசுகிசுவை சில போட்டியாளர்கள் தாங்களாவே உருவாக்கி
கொள்கிறார்கள்.
அந்த
வகையில், இந்த சீசனில் பாலாஜி - ஷிவானி நாராயணன் தான் லவ் ட்ராக்கில்
சிக்குவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது ஆனால், பாலாஜி, ஷிவானியை
கிண்டல் அடித்து சிரிக்கிறார். இதேபோல ஷிவானி, பாலாஜியை நாமினேட் செய்ய
விரும்புகிறார்.
இதனால்
அவர்கள் இருவருக்கும் காதல் வர வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. அதே நேரம்
பாலாஜி-கேப்ரியலா இடையே ஒரு நட்பு உருவாகி இருக்கிறது.ஆஜித், பாலாஜி,
கேப்ரியலா மூவரும் அமர்ந்து மற்றவர்களை கிண்டலடித்து மகிழ்கின்றனர்.
ஷிவானியை
தோழியாக கருதும் கேப்ரியலாவும் ஷிவானிக்கு சப்போர்ட் செய்யாமல் அவருடன்
சேர்ந்து சிரிக்கிறார். இதனால் இந்த சீஸனின் காதல் ஜோடி இவங்க தான் பாஸ் என
ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆஜித்-கேப்ரியலா தான் இந்த சீஸனின் காதல் ஜோடி என கிளப்பி விட்டு
வருகின்றனர். வேறு சிலரோ இந்த சீசன்ல லவ் டிராக் இல்லப்பா இதுவே நல்லா தான்
இருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எது.. என்ன கதை என இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்து விடும்..!


