தளபதி65 - "நீங்க என்ன என்னை தூக்குறது - நானே போறேன்.." - சன் பிக்ஸர்சிடம் மாஸ் காட்டிய முருகதாஸ்..!


'தளபதி 65' படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பின்னணி என்ன என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
'துப்பாக்கி', 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணிபுரிய ஒப்பந்தமானார்கள். 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதன் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அப்போது திரைக்கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்துக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். 
 
சில தினங்களுக்கு முன்பு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது கதை, திரைக்கதையின் வடிவம், வசனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முருகதாஸ் முழுமையாகச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட விஜய்க்கு பரமதிருப்தி. 
 
ஆனால், விஜய் படம் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முழுமையாகக் கதையைக் கேட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் திருப்தி அளிக்கவில்லை. 
 
அப்போது, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக பல காட்சிகளை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். இது முருகாதசிற்கு சுத்தமாக பிடிக்க வில்லை. அப்படி எல்லாம் மாற்ற முடியாது என்பதில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக இருந்திருக்கிறார். 
 
இறுதியில், நீங்க என்ன என்னை தூக்குறது நானே கெளம்புறேன் என்று 'தளபதி 65' இயக்குநர் பொறுப்பிலிருந்து தான் விலகிக் கொள்வதாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 
 
ஏற்கனவே, சர்கார் படத்தில் சன் பிக்சர்ஸ் பேச்சை கேட்டுக்கொண்டு தமிழக அரசு வழங்கிய விலையில்லா வீட்டு உபயோகப்பொருட்களை தீயில் போட்டு கொழுத்துவது போன்ற காட்சியை வைத்து ஆளும் கட்சி மட்டுமில்லாமல், பொது மக்களிடமும் கெட்ட பெயர் எடுத்தார் முருகதாஸ்.
 
இந்நிலையில், மறுபடியும் அப்படி செய்தால் நம்முடைய சினிமா எதிர்காலமே காலியாகி விடும் என்று உஷாராக விலகி விட்டார். ஆனால், முருகதாஸ் 25 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதனால் தான் அவரை தளபதி 65 படத்தில் விலக்கி விட்டார்கள் என்றும் அந்த குறிப்பிட்ட கட்சி சார்ந்த ஊடகங்கள் கதை எழுதி வருகின்றன.
 
சமீபத்தில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கூட என் மகன் சிக்கக்கூடாத இடத்தில் சிக்கியுள்ளான். அவன் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த தகவலை பார்க்கும் போது, ஒருவேளை எந்த சிக்க கூடாத இடம் சன் பிக்சர்ஸாக இருக்குமோ என்று யோசிக்க தோன்றுகின்றது.
தளபதி65 - "நீங்க என்ன என்னை தூக்குறது - நானே போறேன்.." - சன் பிக்ஸர்சிடம் மாஸ் காட்டிய முருகதாஸ்..! தளபதி65 - "நீங்க என்ன என்னை தூக்குறது - நானே போறேன்.." - சன் பிக்ஸர்சிடம் மாஸ் காட்டிய முருகதாஸ்..! Reviewed by Tamizhakam on November 10, 2020 Rating: 5
Powered by Blogger.