7 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ரொமான்ஸ் - கதையே கேட்காமல் "OK" சொன்ன த்ரிஷா..!

 
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.ரஜினிக்காந்த், கமல், அஜித், விஜய், தனுஷ். விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
 
கடைசியாக நடிகர் ரஜினிக்காந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. அதன் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் நடித்தார். 
 
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டது.இந்தக் குறும்படம் திருமணத்திற்கு மீறிய உறவுகளையும் கள்ளக்காதலையும் ஆதரிக்கிறதா என ரசிகர்கள் கழுவி ஊற்றினர். 
 
இருந்தப் போதும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் இந்த குறும்படத்தை கொண்டாடினர்.நடிகை த்ரிஷா தற்போது பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். 
 
இதேபோல் ராம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. நடிகை த்ரிஷா ஒரு விலங்குகள் நல ஆர்வலர் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். விலங்குகள் நல அமைப்பான PeTA-வின் தூதுவராகவும் இவர் பொறுப்பில் இருந்து வருகிறார். 
 
ஒரு முறை இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தூக்கி வீசிய நாயின் வீடியோ ஒன்று வைரலானது அப்போது அந்த நாயை தத்தெடுத்து மருத்துவ உதவிகள் செய்து இன்று வரை தன்னுடைய வீட்டில் வளர்த்து வருகிறார் த்ரிஷா. 
 
அது சரி, இந்த தலைப்புக்கும் த்ரிஷா நாய் மீது அதிக பிரியமாக இருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா..? ஆம், சம்பந்தம் இருக்கின்றது. தற்போது, நடிகர் விஷால் நடிப்பில் நாயினை மையமாக கொண்ட ஒரு படம் தொடங்கப்படவுள்ளது. 
 
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விலங்குகள் சம்பந்தப்பட்ட படம் என்றதும் கதையே கேட்காமல் ஓ.கே சொல்லியுள்ளார் த்ரிஷா. 
 
 
இந்த படம் "Marley and Me" என்ற ஆங்கில படத்தின் சாயலில் உருவாகவுள்ளது என்கிறார் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள். நடிகர் விஷாலுடன் ஏற்கனவே "சமர்" என்ற படத்தில் நடித்திருக்கும் திரிஷா தற்போது ஏழு வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

7 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ரொமான்ஸ் - கதையே கேட்காமல் "OK" சொன்ன த்ரிஷா..! 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ரொமான்ஸ் - கதையே கேட்காமல் "OK" சொன்ன த்ரிஷா..! Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.