தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் கோடை விடுமுறை 2020 க்கே வெளியாக இருந்த நிலையில் கொரானாவின் காரணமாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாஸ்டர் மஹேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி முன்னிட்டு சன் டிவியின் யூ ட்யூப் சானலில் இந்த டீஸர் வெளியாகி
நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் இது நம்மவர் ஸ்டைலில் உள்ளது, மலையாள பட
சாயல் தெரிகிறது என்றெல்லம் பேசி வருகின்றனர். எனினும் மாஸ் ஸ்டைலிஷாக
விஜயை காமித்துள்ள காரணத்தால் இந்த டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படக்குழு தரப்பில் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும், வைபவ்-ன் அண்ணன் சுனில் ரெட்டியும் நடித்துள்ளார்.
ஆம் இப்படத்தில் சுனில் ரெட்டி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் சுனில் ரெட்டி இதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Master Movie