"அட.. இது எப்போ..?" - லக்ஷ்மி ராமகிருஷ்ணனா இது..,? - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்..!


திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். 
 
குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதுடன், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 
 
இதுதவிர படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இப்படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
 
இவரை, பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்த சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் சில காலம் சின்னதிரையில்  தலைகாட்டாமல் இருந்து வந்தார்.  
 
லட்சுமி ராமகிருஷ்ணன்   ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற புதிய நிகழ்ச்சியில் தோன்றிவருகிறார். 
 

சமூக சிந்தனையும், பெண்களின் முன்னேற்றத்தையும் விரும்பும் அவர் 15 வருடங்களுக்கு சினிமாவிற்குள் வந்த போது படத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.