"நான் கர்ப்பிணி சார்.. - சரி வாங்க நாங்க டெலிவரி பண்றோம்.." - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!


சினிமா பாணியில் நடந்த ஒரு கடத்தல் சம்பவம் போலீசாரை அதிர்ச்சியாக்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் பெண் வந்த காரை நிறுத்திய போலீசாருக்கு அடுத்த அவர்கள் கண்ட காட்சி தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். 
 
பிரேசில் நாட்டில் போலீசார் வழக்கம் போலச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
 
சம்பந்தப்பட்ட நீங்கள் இப்போது இருக்கும் சாலை வழியாகத் தான் கடத்தல் போதைப் பொருள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யார் அதைக் கடத்தி வருகிறார்கள், என்ன வாகனத்தில் வருகிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் காவல்துறையிடம் இல்லை.
 
இதனால், குழம்பிப்போன போலீசார் சந்தேகத்திற்கு இடமாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த பெண் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஒரு நிமிடம் ப்ரேக் போட்டு திருதிருவென முழித்தபடி வந்துள்ளார்.
 
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த காரைநிறுத்தி சோதனை செய்தனர். காரை சோதிக்க வேண்டும் கொஞ்சம் கீழே இறங்குங்க என்று கூறியுள்ளனர். கீழே இறங்கிய அந்த பெண்மணி அவருடைய போலியான கர்ப்பமான வயிற்றை அடிப்பகுதியில் பிடித்தவாறே நின்று கொண்டிருந்துள்ளார்.

மேலும், அந்த வயிற்றுப்பகுதி வழக்கத்திற்கு மாறாக அசைவதை கண்காணித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தனியே அழைத்து சென்று பெண் போலீஸ் மூலம் சோதனை செய்தனர். 
 

அப்போது தான், அவர்களுக்கு தெரிந்தது அந்த பெண்மணி தர்பூசணி பழத்தை பாதியாக அறுத்து அதற்குள் கொகைன் என சொல்லப்படும் போதைப்பொருளை வைத்து கடத்தி வந்துள்ளார்.

"நான் கர்ப்பிணி சார்.. - சரி வாங்க நாங்க டெலிவரி பண்றோம்.." - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..! "நான் கர்ப்பிணி சார்.. - சரி வாங்க நாங்க டெலிவரி பண்றோம்.." - அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..! Reviewed by Tamizhakam on December 02, 2020 Rating: 5
Powered by Blogger.