சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், அதிமுகவின் கோவைப் பகுதி முகமாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது 20 ஆதரவு எம்எல்ஏக்களுடன் தவெகவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இணையப் பக்கங்களிலும் இந்தத் தகவல் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தத் தகவலின்படி, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்து ஆட்சியை அமைக்க உதவி செய்த பின்னர், அந்த 20 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து, மீண்டும் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் முனைப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த 20 தொகுதிகளிலும் தவெக கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பதால், விஜய் தலைமையிலான ஆளும் கட்சி நிலையில் இருக்கும் போது இந்த எம்எல்ஏக்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் எஸ்.பி.வேலுமணி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலின் உண்மைத் தன்மை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், திமுகவும் தவெகவும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இன்று நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கான ஆதரவு தேடும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தப் பின்னணியில் பரவும் இத்தகவல்கள் அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
Summary : Political discussions in Tamil Nadu indicate that AIADMK leader S P Velumani and 20 supporting MLAs may align with Tamilaga Vettri Kazhagam to help establish the government with majority support. Following this, the MLAs are expected to resign and contest elections again under their original symbol. Meanwhile, DMK and TVK are considering talks with AIADMK to address the situation.