"நீ வேணும் டா செல்லம்" பட நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..!


கடந்த 2002-ம் ஆண்டு 'ஏழுமலை' படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை "கஜாலா". அதற்கடுத்து 'யுனிவர்சிட்டி', 'ஜோர்', 'ராம்', 'மதராசி', 'நீ வேணும்டா செல்லம்', 'எம்டன் மகன்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களில் நடித்தவர். 
 
இதற்கிடையில் தெலுங்கு பக்கமும் நடிக்கப் போனார்.அங்கே போன வேகத்தில் ஏதோ ஒரு காதலில் சிக்கி, மனம் விரக்திக்கு ஆளாகி தற்கொலைக்குக்கூட முயன்றார். அப்போது நமது அர்ஜூன்தான் ஓடோடிச் சென்று அவரை கவனித்து ஆறுதல் சொல்லி தேற்றி அழைத்து வந்தார். 
 
அதன் பின்பும் திடீரென்று காணாமல் போனார். விசாரித்ததில் படிக்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள். வெற்றிகரமாக தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு திரும்பியும் கஜாலா இப்போது மீண்டும் திரையுலகத்திற்குள் நுழையப் போகிறாராம். 
 
இது பற்றி எச்சரிக்கையுடன் பேசும் கஜாலா, “இதுவொரு கிரியேட்டிவ் பீல்டு. நம்முடைய திறமையை வெளிக்காட்ட இதுதான் சரியான இடம்.. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் சினிமா துறையில் பிரகாசிப்பதன் மூலம் நாடு முழுக்க அறிமுகமாகலாம்.. பிரபலமாகலாம். 
 
நானும் இந்த பிரபலத்தில் ஒருத்தி என்பதை நினைத்து இப்போதும் எனக்கு பெருமையாகவே உள்ளது. நதியா, ரேவதி, ஷாலினி மூவருமே எனது ரோல்மாடல்கள்.. இத்தனையாண்டு கால நடிப்பு அனுபவத்தை வைத்துக் கொண்டு வேறொரு புதிய துறையை தேர்ந்தெடுக்கலாம். 
 
ஆனால், என் மனம் ஒப்பவில்லை. ஆகவே நான் மறுபடியும் இதே திரைத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக எனது நடிப்புத் திறனை காண்பித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்..” என்று உறுதியாகச் சொல்கிறார் கஜாலா. 
 
 
எல்லாம் சரிதான்.. எந்தப் புண்ணியவான் கேமிராமேன் இப்படி போட்டோ எடுத்தால்தான் திரும்பவும் நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு சொன்னதுன்னு தெரிய வில்லை. 
 
 
இப்போ நடிகை கஜாலா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டிருப்பதை பார்த்தா.. அதுல பழைய கஜாலாவில் கால்வாசியைக்கூட பார்க்க முடியவில்லை. 


 
அவ்வளவு மேக்கப்.. யாராச்சும் புதுமுகமான்னு கேட்டுறப் போறாங்க..!

"நீ வேணும் டா செல்லம்" பட நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..! "நீ வேணும் டா செல்லம்" பட நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..! Reviewed by Tamizhakam on December 07, 2020 Rating: 5
Powered by Blogger.