அட்லி அலுவலத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் விஜய் - பீதியில் ரசிகர்கள்..! - என்ன காரணம்..?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் 2020ம் ஆண்டு ரிலீஸாவதாக இருந்தது. 
 
ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே அது முடியாமல் போனது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. 
 
இந்த பேச்சு கிளம்பிய நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.அதுவரை மாஸ்டர் ரிலீஸ் தேதி தெரியாமல் இருந்த ரசிகர்கள் அமைச்சர் சொன்னதை கேட்டு குஷியாகிவிட்டனர். 
 
கொரோனா வைரஸ் பிரச்சனையால் தற்போது தியேட்டரிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்துமாறு மாஸ்டர் படக்குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
விஜய் படம் என்றால் அதிகாலை சிறப்புக் காட்சி நிச்சயம் இருக்கும். அந்த சிறப்பு காட்சியை பார்க்க ரசிகர்கள் போட்டா போட்டி போடுவார்கள். கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சி சாத்தியமா என்று கேள்வி எழுந்தது. 
 
சிறப்புக் காட்சி குறித்து விஜய் ரசிகர்கள் யோசனையில் இருக்க அமைச்சர் கடம்பூர் ராஜு அனுமதி கோரினால் அனுமதிப்போம் என கூறினார். இந்நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் அட்லி அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். 
 
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக இருந்த முருகதாஸ் விலகி கொள்ள இப்போது அடுத்த படத்தை இயக்குவது யார் என்று தெரியாமல் இருக்கின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் அட்லியை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே, அட்லி மீது கதையை காப்பியடித்து படம் எடுப்பவர் என்ற புகார் படத்திற்கு படம் வந்துகொண்டே இருக்கின்றது.இப்போதெல்லாம், இணையத்தில் காப்பி என்பதற்கு குறியீடாக அட்லி மாறியுள்ளார்.

அட்லித்தனம்.. அட்லியன் என காப்பி அடிப்பவர்களை கமென்ட் அடிக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் மீண்டும் அட்லியுடன் விஜய் கூட்டணி வைப்பாரோ என்ற பீதியில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

அட்லி அலுவலத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் விஜய் - பீதியில் ரசிகர்கள்..! - என்ன காரணம்..? அட்லி அலுவலத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் விஜய் - பீதியில் ரசிகர்கள்..! - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on December 04, 2020 Rating: 5
Powered by Blogger.