Posts

Showing posts with the label Director Atlee

"என்ன இது.., மண்ட மேல கீரிப்புள்ள படுத்திருக்கு.." - அட்லி வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

Image
பிகில் படத்தை இயக்கிய பிறகு மும்பை சென்று ஷாரூக்கானை சந்தித்த அட்லி, அவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும் அந்த படம் தொடங்குவது குறித்த அப்டேட்டே வெளியாகாமல் இருந்தது.    இந்த நிலையில், தனது 66ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை அட்லிக்கு விஜய் கொடுத்திருப்பதாக கூட ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.    அதையடுத்து ஷாரூக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் அட்லி ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோவை அவரது மனைவியான பிரியா சோசியல் மீடியாவில் வெளியிட்டதை அடுத்து அந்த படம் குறித்து செய்திகள் மீண்டும் புகையத் தொடங்கியது.    இந்த நிலையில், தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாரூக்கான் அதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் மற்றும் அட்லி இயக்கும் படத்திலும் நடிக்கப்போகிறாராம். அந்த வகையில் ஷாரூக்கான் - அட்லி இணையும் படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து தொடங்குவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.   இந்நிலையில், அட்லி புதிதாக செய்து கொண்டுள்ள சிகை அலங்கர புகைப்படம் ஒன்று இணையத்தில்...

"ஏ.. உடும்பு.. மரவெட்ட மாதிரி இருக்க உனக்கு மசால் வடை சைஸ்ல மச்சம் இருக்கு டா..." - ப்ரியா அட்லி வெளியிட்ட புகைப்படம் - வயிறு எரியும் சிங்கிள்ஸ்..!

Image
ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் நான்கு படங்களை மட்டுமே இயக்கி அந்த நான்கு படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலில், முன் வரிசையில் சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குநர் என்றால் அது அட்லி தான்.    இந்த நிலையில் அட்லி அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்க போகிறார் ஹீரோ யார்.? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது, அதனால் அட்லீ படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் படத்தை தயாரித்து வருகிறார். அட்லீக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அதனை பலமுறை மேடையில் கூறியுள்ளார்.    இவர் இயக்கிய நான்கு படங்களில் 3 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.இவர் சிங்கம் படத்தில், அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்த, நடிகை பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணா பிரியா.    இவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற சீரியலில் தான் நடித்தார். அதன் பின் சிறு சிறு குறும்படங்களில் நடித்து கொண்டு வந்தார். பின் இவர் சினிமாவில் படங்களில் துணை...

"இதையே நான் பண்ணியிருந்தா எல்லோரும் என்ன பொழந்திருப்பங்களே டா.." - மூக்கை சிந்தும் அட்லி..?!

Image
அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .    இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார்.    இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளி பண்டிகை அன்று வெளியானது மற்றும் விஜய் நடிப்பில் மீண்டும் "பிகில்" என்ற திரைப்படம் தீபாவளி 2019 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   அட்லி இல்ல சுட்லி   இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் காப்பி இயக்குனர் என்ற ஒரு பெயர் இவருக்கு உள்ளது. இன்னும் சில நெட்டிசன்கள் அட்லி இல்லை சுட்லி என்று கூட கலாய்த்து வருகிறார்கள். இதில் உச்ச கட்ட கூத்து என்னவென்றால் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை சந்திக்க நடிகர் விஜய்யும், இயக்குனர் அட்லியும் சென்றனர்.   மூக்கை உடைத்த உலக நாயகன்   சென்ற இடத்தி...

ஒல்லியாக வெல வெலன்னு இருந்த அட்லியா இது..? - உடல் எடை கூடி குண்டான அட்லி - வைரல் போட்டோ..!

Image
ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லி. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வைத்து படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.    அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்லி தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களில் மீண்டும் விஜய்யை வைத்து இயக்கி தமிழ் சினிமாவின் வசூல் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.    இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயின் வசூல் படங்களிலும் இடம் பிடித்தது குறிப்பிடதக்கது.    தொடர்ந்து விஜய்யை வைத்து வெற்றி கொடுத்து வருவதால் விஜய் ரசிகர்கள் இப்போது கூட இவரை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர் பலமுறை மேடைகளில் எனக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அதனாலதான் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்கியதாக பெருமிதத்துடன் கூறியிருந்தார்.   தற்போது அட்லி எந்த ஒரு படத்தையும் இயக்காததால் தனது குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். இவரும் இவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்...

கொரோனா தொற்றுக்கு கொரியன் இயக்குனர் மரணம் - அட்லி சோகம்..!

Image
தெற்காசிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடமும் பிடித்த பிரபல இயக்குநர்களில் ஒருவர் கிம் கி டுக். கொரியாவைச் சேர்ந்த இவர் இயக்கிய ’சமாரிடன் கேர்ள்’, ’3 அயர்ன்’, ’ஒன் ஆன் ஒன்’ உள்ளிட்டப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவை.    வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது.    கிம் கி டுக்கை விருது நாயகன் என்றே சொல்லலாம். வெனிஸில் நடந்த 69வது திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை தனது Pieta படத்திற்காக தட்டிச்சென்றவர். சமீபத்தில், சொந்தமாக வீடு வாங்குவதற்காக நவம்பர் 20-ல் லட்வியா நாட்டுக்கு சென்றிருந்திருக்கிறார் கிம்.    இதற்காக ஜுர்மலா என்கிற கடல் பகுதியில் வீடு பார்த்து வைத்திருந்தவர், அதனை பேசி முடிப்பதற்காக சென்றுள்ளார். நவம்பர் 20ம் தேதி சென்ற கிம் குறித்து அடுத்தகட்ட தகவல் ஏதும் வெளியாகததால் அச்சம் அடைந்த அவரின் நண்பர்கள் ...

அட்லி அலுவலத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் விஜய் - பீதியில் ரசிகர்கள்..! - என்ன காரணம்..?

Image
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் 2020ம் ஆண்டு ரிலீஸாவதாக இருந்தது.    ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே அது முடியாமல் போனது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது.    இந்த பேச்சு கிளம்பிய நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.அதுவரை மாஸ்டர் ரிலீஸ் தேதி தெரியாமல் இருந்த ரசிகர்கள் அமைச்சர் சொன்னதை கேட்டு குஷியாகிவிட்டனர்.    கொரோனா வைரஸ் பிரச்சனையால் தற்போது தியேட்டரிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த எண்ணிக்கையை 75 சதவீதமாக உயர்த்துமாறு மாஸ்டர் படக்குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.   விஜய் படம் என்றால் அதிகாலை சிறப்புக் காட்சி நிச்சயம் இருக்கும். அந்த சிறப்பு காட்சியை பார்க்க ரசிகர்கள் போட்டா போட்டி போடுவார்கள். கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சி சாத்தியமா என்று கேள்வி எ...

அட்லியை துரத்தி அடிக்கும் தயாரிப்பாளர்கள் - என்னடா இது கமர்ஷியல் இயக்குனருக்கு வந்த சோதனை.!

Image
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற எடுத்த நான்கு படங்களுமே சூப்பர்ஹிட் படமாக கொடுத்தவர்தான் அட்லீ. இவர் மீது இருக்கு கதை பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் அவரது மேக்கிங் பலருக்கும் ஃபேவரைட். இருந்தாலும் சமீப காலமாக அட்லீயை வைத்து படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.  அட்லீ கடைசியாக விஜய்யை வைத்து இயக்கிய பிகில் படம் 300 கோடி வசூலை செய்திருந்தாலும் அட்லீக்கு வாய்ப்பு தர மாட்டேன் என பல தயாரிப்பாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். சரி, ஹிந்திக்கு செல்லலாம் என்று பார்த்தாலும் அங்கேயும் அதே நிலைமைதான்.  முதலில் ஓகே சொன்ன ஷாருக்கான் பிறகு அட்லீயின் கதைத் திருட்டை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் யாரையாவது வைத்து படம் இயக்கலாம் என எந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளரிடம் கதை கூற சென்றாலும் அட்லீக்கு ஆதரவாக எதுவுமே நடக்கவில்லையாம்.  அதற்கு காரணம், பழைய கதைகளை சுடுவதால் மட்டுமல்ல. தயாரிப்பு தரப்புக்கு சரியான பட்ஜ...

அட்லி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..! - தளபதி விஜய்க்கு எழுதிய கதையாம்..!

Image
அட்லி என்றால் ஹிட் பட இயக்குனர் என்ற பெயருடன் காப்பி கேட் இயக்குனர் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. ஒரு படத்தை காப்பி அடிக்காமல் மூன்று அல்லது நான்கு படங்களின் கதையை எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு புது படமாக கொடுப்பதில் ஜித்து ஜில்லாடி நம்ம அட்லி. மெர்சல் படம் வெளியடைந்த பிறகு அந்த படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மாடர்ன் வெர்ஷன் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படியான நிலையில், நடிகர் விஜயும், அட்லயும் கமல்ஹாசனை சந்திக்க சென்ற போது நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது, பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை ஒட்டி வைத்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அந்த போஸ்டர் குறித்து கேட்ட போது, பொதுவாக நான் நடித்த படங்களில் போஸ்டர்கள் எனது அலுவலகத்தில் இருக்கும். எதேர்ச்சையாக பல போஸ்டர்கள் இருக்கும். ஆனால், அந்த அபூர்வ சகோதர்கள் போஸ்டர் எதேர்ச்சையானது அல்ல என்று தனக்கே உரிய பாணியில் ஒரு குத்து குத்தினார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு உதவியாளராக பணியாற்றி அதன்பின் இயக்குனராக களம் இறங்கியவர் அட்லி. அவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி மிகப் பெரிய ஹிட்டானது....

அட்லியின் படத்தை பார்த்து மிரண்டு போய் வாழ்த்து கூறிய மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் - என்ன படம் தெரியுமா...?

Image
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி,மாநகரம் என இரண்டு ஹிட் படங்களை இயக்கி விட்டு தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்துள்ளார்.இந்த படம் லாக் டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்ததும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இயக்குனர் அட்லி தயாரிப்பில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "அந்தகாரம்" திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் படத்தை பார்த்து மிரண்டு போய் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அட்லி தயாரித்துள்ள அந்தகாரம் படத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருக்கிறது. இந்த லாக்டவுனில் அந்த படத்தை பார்த்து மிரண்டு போன லோகேஷ் கனகராஜ், இயக்குனர் விக்னராஜன் எழுத்துக்கு ரசிகர் என பதிவிட்டுள்ளார். படம் ரொம்ப சூப்பர் என்று பாராட்டியுள்ளார். "அந்தகாரம்" படமும் லாக் டவுன் காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை லோகேஷ் கனகராஜிற்கு அனுப்பி பார்க்க வைத்துள்ளது படக்குழு. கைதி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன்தாஸ் இந்த படத...

"இங்க ஐ.டி ரெய்டுன்னு கலவரமா இருக்கு - நீ என்னடான்னா.." - அட்லி வெளியிட்ட புகைப்படம் - கதறும் ரசிகர்கள்..!

Image
மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சந்தித்து பிகில் படம் குறித்து 5 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தங்கள் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள அவர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடத்தினார்கள்.  இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பிகில் பட பைனான்சியரான அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ. 77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதை வருமான வரித்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. விஜய் வீட்டில் நடந்த சோதனைக்கு துருப்பு சீட்டே பிகில் படத்திற்கு நடிகர் விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது தான். இதனால், விஜய் ரசிகர்கள் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக பல கருத்துகளை வெளியிட்டு கொண்டிருகிறார்கள். ஆனால, பிகில் படத்தின்இயக்குனர் அட்லி தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வேறு வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எங்கே கலவரம் ப...

"வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடு.." - அட்லியிடம் கேட்கும் "பிகில்" தயாரிப்பு நிறுவனம்..? - ரசிகர்கள் ஷாக்..!

Image
இயக்குனர் அட்லீ நடிகர் விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து இயக்கிய பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் இயக்குனர் பட்டியலுக்குள் வந்துவிட்டார்.  இயக்குனர்கள் ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு அனைவரும் விரும்பும் கமர்ஷியல் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார். ஆனால், "பிகில்" படம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக 30 சதவிகிதம் அதிகமாகிவிட்டதால்,  படத்தை விற்கும் போதே பெரிய தொகைக்கு தான் விற்றார்கள்.  இதனால், போட்ட பணம் மட்டுமே பலருக்கும் கைக்கு வந்தது, யாருக்கும் பெரியளவில் நஷ்டமும் இல்லை. நிலைமை அப்படியிருக்க சமூக வலைத்தளத்தில் பிகில் தயாரிப்பு நிறுவனம், அட்லீயிடம் சம்பளத்தில் ரூ 3 கோடி திருப்பி கேட்டதாக ஒரு தகவல் பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.  இது குறித்து படகுழுவிற்கு நெருங்கிய வட்டரங்களிடம் விசாரித்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. அட்லீயிடம் யாரும் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்கவில்லை.அது வெறும் வதந்தி மட்டுமே என்று கூறுகிறார்கள்.  அட்லி குறித்து பல குற்றசாட்டுகள் வந்தாலும். இந்த சம்பள பணத்தை திரும்ப கேட்ட வ...

அஜித்தால் சிவாவுக்கு கிடைத்த கவுரவம் - விஜய்யால் அட்லிக்கு கிடைக்க வில்லையே..? - ரசிகர்கள் ஷாக்

Image
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் அட்லிகுமாரும் ஒருவர். இவர் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ராஜாராணி நல்ல வரவேற்ப்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.  அதனை தொடர்ந்து, விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என அனைத்து படங்களும் ஹிட் தான். அப்படியிருக்க அட்லீ தற்போது ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளனர்.  இவர் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த பிகில் படம் சுமார் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது, கண்டிப்பாக இவரின் சம்பளம் கோடிகள் இருக்கும்.  ஆனால், Forbes பத்திரிக்கை Top 100 இந்திய பிரபலங்கள் 2019 பட்டியலில் அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, ரஜினி-யை வைத்து பேட்ட படத்தை இயக்கிய  கார்த்திக் சுப்புராஜ் இடம்பெற்றுள்ளனர்.  ஆனால், பிகில் படத்தை இயக்கிய அட்லீ இல்லாமல் போனது பலருக்கும்அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீ எனக்கு மனைவி மட்டுமல்ல - இயக்குனர் அட்லி உருக்கமான பதிவு..!

Image
ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்த இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.  பிகில் படத்திற்கு பிறகு அவர் யாரை இயக்குகிறார்.? என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் உள்ளது. இதுஒருபுறமிருக்க இன்று அட்லீ தன் மனைவி பிரியாவின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறியுள்ளதாவது, "சந்தித்தோம், நண்பர்களானோம், பின்னர் திருமணம் செய்துகொண்டோம். நீ எனக்கு மனைவியானாய். இப்போது நீ எனக்கு மகள், எனக்கு எல்லாமே நீதான்" என சொல்லியுள்ளார் அட்லீ. View this post on Instagram ‪We met v became friends then v got married u became my wife now ur my daughter and everything to me ❤️Wish u many more happy returns of the day my papa @priyaatlee ❤️❤️❤️ luv u forever and ever ❤️ ‬ A post shared by Atlee (@atlee47) on Dec 6, 2019 at 8:30am PST

இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ ஷாருக்கான் இல்லை..! - இவரு தான்..! - ஷாக்கிங் அப்டேட்..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் விமர்சன ரீதியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.  படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து, பிகில் படத்திற்கு போட்டியாக வெளியான "கைதி" திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து "சங்கி" என்ற படத்தை இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என்று கூறுகிறார்கள். இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்கபோகிறார் என்ற புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.  அதன் படி, நடிகர் விஜய்யே இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கவுள்ளது என நம்பதகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல் வந்துள்ளன.  இந்த கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்றும், பேச்சுவார்த்தை தான் நடந்துகொண்டிருகின்றதாம். நடிகர் விஜய் ஓகே சொன்னால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால், தற்போது...

ஷாருக்கான் இல்லை, இயக்குனர் அட்லி அடுத்து இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..?

Image
விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்று வரும் படம் பிகில். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.61.63 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.  இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அட்லியிடம் பிகில் 2 எடுக்க திட்டம் இருக்கிறதா..? என கேட்கப்பட்டது.  அதற்கு, "ராயப்பன் யார், அவருடைய பின்னணி என்ன? மைக்கேல் எப்படி பிகில் ஆனார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை வைத்து ஒரு படம் எடுக்கும் யோசனை இருக்கிறது. ஆனால் அதை இப்போதைக்கு எடுக்கும் இல்லை", என பதிலளித்தார்.  மேலும், ரஜினியை வைத்து படமெடுக்கும் எண்ணம் உள்ளதா..? பாட்ஷா 2 படத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாமா,.? என கேட்கப்பட்டது. அதற்கு, நிச்சயமாக ஒரு யோசனை இருக்கிறது. இதுவரை வெளிவந்த ஆக்ஷன் படங்களில் பாட்ஷா தான் சிறந்த டெம்ப்ளேட். ஒரு கதை தயாராக இருக்கிறது. தலைவர் (ரஜினி) சரியென்றால் ஷூட்டிங்க கெளம்பிட வேண்டியது தான் என அட்லி பதிலளித்தார். தற்போது, தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினி. அடுத்து இயக்க...

இயக்குனர் அட்லி குறித்து இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் இந்த படம் ரூபாய் நூற்று என்பது கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு மட்டுமே ரூபாய் ஐம்பது கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.  அதே சமயம் "பிகில்" படத்திற்காக இயக்குனர் அட்லீ ரூபாய் இருபத்தி ஐந்து கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.  இயக்குனர் அட்லி 'பிகில்' படத்தை அடுத்து ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும் ஷாருக்கான் படத்திற்காக ரூபாய் நாற்பது கோடி அட்லீக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.  நடிகர் ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்குவதே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அதற்குள் சம்பளம் குறித்த வதந்தி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.

போட்றா வெடிய..! - வெளியான பிகில் டீசர் அப்டேட்..! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

Image
பிகில் திரைப்படம் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர்ரை வெளியிடாமல் தாமதித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ளது பிகில் திரைப்படம். நயன்தாரா, யோகி பாபு, விவேக், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் பிகில் படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  கால்பந்து விளையாட்டு மற்றும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  அதில் நடிகர் விஜய் பேசிய பல கருத்துகள் அரசியலில் பரபரப்பை கிளப்பியது மட்டுமல்லாமல் பட்டிமன்ற பேச்சாளர் பேசியதை நடிகர் விஜய் காப்பி அடித்துவிட்டார் என்பதுபோன்ற கருத்துக்களும் சமூகவலைதளங்களில் பரவியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படமே இன்னும் 20 நாள்-ல ரிலீஸ் ஆகப்போகுது..! இன்னும் டீசரே ரிலீஸ் பண்ணாம இருக்கீங்க என்று ரசிகர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்றனர்.  இந்த நிலையில் ...

ரெஸ்ட் எடுக்க போன விஜய் - அட்லி வைத்த ட்விஸ்ட் - என்ன நடக்குது பிகிலில்..?

Image
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சி முடிந்த கையேடு கடந்த 20-ம் தேதி லண்டன் சென்றுவிட்டார் விஜய்.  அவர் விமான நிலையத்தில் முகத்தை மூடிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.லண்டன் சென்றுள்ள விஜய் அங்கு 10 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு தனது அடுத்த படமான தளபதி 64 படத்தில் நடிக்கவிருந்தார்.  லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 64 படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது. நிலைமை இப்படி சுமுகமாக போய்க்கொண்டிருக்க, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அட்லி அண்ணா இன்னும் கொஞ்ச சீன்-லாம் ரீ-சூட் பன்னலாம்-னு இருக்கேன். கெளம்பி வந்துடுங்க என்று கூறியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது மீண்டும் பிகில் படக்குழுவினர் கேமராவை கையில் தூக்கியுள்ளனர். அதில், குறிப்பிடதக்க விஷயம். நடிகர் விஜய்யின் அறிமுக காட்சியை இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஷூட் செய்யவுள்ளனர். எனவே, அறிமுக  காட்சி மிகப்பெரிய கூடத்தின் நடுவே விஜய் தோன்றுவது போலவே இர...

இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
இயக்குனர் அட்லி இப்போது விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவருடைய அடுத்த படத்தின் ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்தது.  இதனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை அட்லி இயக்குவர் என்ற தகவல்கள் வந்தன. ஆனால், தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தையும் முருகதாஸிற்கே கொடுத்துள்ளார்.  அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் அட்லி கதையில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். எனவே, இயக்குனர் அட்லி ரஜினி படத்திற்கு முன்பே தனது அடுத்த படத்தை முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்து இயக்கவுள்ளார்.  ஆம், தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் RRR படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர்-தான் அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழில் நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரை இயக்க...

குருவை மிஞ்சிய சிஷ்யன் - அட்லி பார்த்த வேலையால் கிறுகிறுக்கும் கோலிவுட்

Image
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.  அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆவதை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.  இயக்குனர் அட்லி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில், படத்தின் உத்தேச பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய்களை அவுட்-டோர் படப்பிடிப்பில் எகிற வைத்துவிட்டார் இயக்குனர் அட்லி என்ற தகவல்கள் வந்துள்ளன.  மேலும், அவுட்-டோர் யூனிட் பில்...