"VJ சித்து தற்கொலை.." - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா என்ன கூறியுள்ளார் பாருங்க..!
தொலைக்காட்சி VJவாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு தன்னுடன் திருமணம் நிச்சயிக்கபட்ட ஹேமந்த் என்பவருடன்தங்கியிருந்த அவர் அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டது பல்வேறு யூகங்களுக்கு இடம் அளிக்கும் விதமாக உள்ளது.
இது நிஜமாகவே தற்கொலை தானா..? என்ற கேள்வியும்எழுந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை சித்ராவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே தற்கொலையா..? அல்லது கொலையா..? என்ற விபரங்கள் தெரிய வரும். இந்நிலையில், இவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உடன் நடித்து வரும் நடிகை ஹேமாராஜ்குமார் இவரது தற்கொலை குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடைய இதயமே உடைந்து விட்டது. இது நீ இல்லை சித்து. இப்போது நான் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன். என்று கூறியுள்ளார்.
"VJ சித்து தற்கொலை.." - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா என்ன கூறியுள்ளார் பாருங்க..!
Reviewed by Tamizhakam
on
December 08, 2020
Rating:
