"இப்போதைய தேவை இது தான்.." - 140 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த ஜெயம் ரவி பட நடிகை..!


போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழில், ஜெயம் ரவி நடித்த நிமிந்து நில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
 
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டில் ராகிணி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, ஜாமீன் வழங்கவும் மறுத்து விட்டது.
 
இதனால் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ராகிணி திவேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
 
இதையடுத்து கிட்டதட்ட 140 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் வீட்டுக்கு திரும்புகிறார். அவரை சிறையில் இருந்து ஜாமீனில் எடுக்க அதிக முயற்சி எடுத்தவர் ராகிணியின் தந்தை கர்னல் ராகேஷ் குமார். 
 
அவர் கூறும்போது, ராகிணி வீட்டுக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.எங்களுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றார். 
 
இப்போது ராகிணிக்கு முக்கியமான தேவை போதுமான ஓய்வு தான். அவர் வேறு வேலையை தொடங்கு முன்பு, உடலையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டும் அதற்க்கான அனைத்து வேலைகளையும் செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

"இப்போதைய தேவை இது தான்.." - 140 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த ஜெயம் ரவி பட நடிகை..! "இப்போதைய தேவை இது தான்.." - 140 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த ஜெயம் ரவி பட நடிகை..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.