"இதனால் தான் சினிமாவை விட்டே போய்விட்டேன்.." - போட்டு உடைத்த அப்பாஸ்..!


1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகர் அப்பாஸ். இதை தொடர்ந்து வி.ஐ.பி, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டார். 
 
கடைசியாக இவர், தமிழில் ராமானுஜம் என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கள்ளம் என்கிற படத்தில் நடித்தார் . 
 
பட வாய்ப்புகள் குறைந்த பின், சில டிவி சீரியல்களிலும் நடித்தார்.எந்தவொரு சமூக வலைதளத்திலும் அப்பாஸ் இல்லை. இப்போது என்னதான் செய்கிறார் என்று விசாரித்த போது, அவர் இந்தியாவிலேயே இல்லை என்றார்கள். 
 
தற்போது தன்னுடை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்த வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் மாற்றி மாற்றி படங்கள் நடித்து வந்தவர் நடிகர் அப்பாஸ். 
 
1996ம் ஆண்டு காதல் தேசம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் சிறப்பு வேடத்தில் படங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்தே விலகியிருந்தார், நடிப்பையே நிறுத்திவிட்டார். 
 
அண்மையில் பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த ஒரு பேட்டியில் ஏன் நடிப்பை நிறுத்தினேன் என கூறியுள்ளார். சில நேரங்களில் போர் அடித்துவிட்டதாகவும், தனது மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் எந்த ஒரு கதையும் வராததால் நடிப்பை நிறுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

"இதனால் தான் சினிமாவை விட்டே போய்விட்டேன்.." - போட்டு உடைத்த அப்பாஸ்..! "இதனால் தான் சினிமாவை விட்டே போய்விட்டேன்.." - போட்டு உடைத்த அப்பாஸ்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.