ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் - என்ன காரணம்..? - பரபரப்பு தகவல்..!


நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகர் விஜய் தனக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேரை அங்கிருந்து காலி செய்து தரும்படி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ரவிராஜா, குமார் ஆகியோரை நடிகர் விஜய் தங்க வைத்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் தனது இயக்கத்தை கட்சியாக பதிவு செய்த போது அவர்கள் இருவரும் ஆதரவாக செயல்பட்டதாக கூறி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். 
 

 
இதையடுத்து, வீட்டை காலி செய்யும் படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 பேரும் காலி செய்யாமல் இருந்துள்ளனர். இதனால், கடுப்பான நடிகர் விஜய், தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.
 
இந்த விவகாரம் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் - என்ன காரணம்..? - பரபரப்பு தகவல்..! ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் - என்ன காரணம்..? - பரபரப்பு தகவல்..! Reviewed by Tamizhakam on January 07, 2021 Rating: 5
Powered by Blogger.