"ஒழுங்கா எடுத்துடுவீங்களா...?" - விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா..!


‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பின்னர் ‘பாவகதைகள்’ என்ற ஆந்தாலஜியில் பணியாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 
 
இந்த படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இரண்டு முன்னணி நடிகைகள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் இரண்டாவது படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்". 
 
செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். டிசம்பர் 10-ம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. 
 
அதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி இணைந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற விக்னேஷ் சிவன் அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 
 

ஒழுங்கா எடுத்துடுவீங்களா

 
அந்த வீடியோவில் இருவரும் அன்பை பரிமாறிக் கொண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது சமந்தாவும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். 
 
அவரை வரவேற்ற விக்னேஷ் சிவனிடம் ஒழுங்கா எடுத்துடுவீங்களா டைரக்டர் சார் என கிண்டலாக சமந்தா கிண்டலாக கேட்க, பார்ப்போம் என்கிறார் விக்னேஷ் சிவன். அதேபோல் பதிலுக்கு சமந்தாவிடம், இன்னும் 10 நிமிடத்தில் ரெடியாகாது. 
 
அதனால் பொறுமையாக வாங்க எனக் கூறி கிண்டலடித்துள்ளார் விக்னேஷ் சிவன். ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இருக்கும் நயன்தாரா, அந்தப் படத்தை முடித்துவிட்டு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.