"எந்த ஆம்பளையும் இதை பண்ண மாட்டான்.." - சீரியல் பிரவீனா வெளியிட்ட வீடியோ.. ! - குவியும் லைக்குகள்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா. ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது. 
 
பிரியமானவன் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர்.
 
மேலும், இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்டு மற்றும் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான கேரளா அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
 
தமிழில் சீரியல் நடிகையாக இவர் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும், மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். 
 
அந்த வகையில், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும், சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். சீரியல் விரும்பிகள் வட்டாரத்தில் இவருக்கு தனி ரசிகர் வட்டமே உள்ளது.

இன்றைய இளவட்ட நடிகைகளுக்கு இணையாக இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
 

 
அந்த வகையில், எந்த ஆம்பளையும் இதை பண்ண மாட்டான் என்று தான் நடித்துள்ள சீரியலில் ஒரு காட்சியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

"எந்த ஆம்பளையும் இதை பண்ண மாட்டான்.." - சீரியல் பிரவீனா வெளியிட்ட வீடியோ.. ! - குவியும் லைக்குகள்..! "எந்த ஆம்பளையும் இதை பண்ண மாட்டான்.." - சீரியல் பிரவீனா வெளியிட்ட வீடியோ.. ! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.