வேணாம் விட்ருங்க.. இயக்குனர் காலில் விழுந்து கெஞ்சியும் விடல.. பிரவீனா கூறிய பகீர் தகவல்!
தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை பிரவீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனதைத் திறந்து பேசியுள்ளார். அவரது பேச்சு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரவீனா கூறியதாவது: "சீரியலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும், நான் நடிக்கும் கதாபாத்திரம் நேர்மறையானதாக இருக்க வேண்டும். எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு ஒருபோதும் சரிவராது. வில்லி கதாபாத்திரமாகவோ அல்லது யாருக்காவது தீங்கு செய்யும் காட்சிகளில் நடிப்பதோ என்னால் முடியாது. தவறுதலாக அப்படியான காட்சியில் நடித்து விட்டால், அன்று இரவு என்னால் தூங்க முடியாது. மனதில் ஒரு பாரமாக உணர்வேன்." அவர் மேலும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்: "ஒரு தமிழ் சீரியலில், மருமகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. இப்படியான எதிர்மறையான கதாபாத்திரம் எனக்கு வேண்டாம் என்று காலில் விழுந்து கேக்கிறேன் என்று இயக்குநரிடம் கெஞ்சினேன். ஆனால், அவர்கள் கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றுவதாகத் தெரியவில்லை. இதனால், நான் மிகுந...