அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். லீடர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின்னர் தமிழில் தனுஷ் ஜோடியாக மயக்கம் மற்றும் சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார்.
பின்னர் வாய்ப்பு குறையவே அமெரிக்காவுக்கே திரும்பி விட்டார். நடிகை ரிச்சா கங்கோபத்தியா தெலுங்கில் ‘லீடர்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தில் அறிமுகமானார்.
அந்த படத்தில் இவரது வலிமையான கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதையடுத்து சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார். ரிச்சா கடைசியாக 2013-ம் ஆண்டு ‘பாய்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
அதையடுத்து தற்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் தான் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாறு கேட்பவர்களுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ளார். ’எனது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 8 வருடங்களுக்கு முன்பு நடிப்பை விட்டு விலகிய ஒருவரிடம் தொடர்ந்து ஒரு கற்பனை உலகில் வாழ சொல்கிறார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் உண்மையான அக்கறை இல்லாமல் என்னுடைய படத்தைப் பற்றிப் பேசுவது, என்னுடைய புகைப்படங்களைப் பகிர்வது போன்றவற்றைச் செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், என் வாழ்க்கை பயணத்தால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும் நன்றி. அவர்கள் தேவைகளுக்காக என்னை நாடுவோர்களை விட எனக்கென்று சில கருத்துக்கள் உள்ளன, எனக்கு மதிப்புகள் உள்ளன, அதுவே எனக்கு முக்கியம்.
ஆகவே, ஒரு சாதாரண நபராக நீங்கள் என்னை மதித்தால் மட்டுமே உங்களால் எனக்கு மகிழ்ச்சி”என்று கூறினார். அவ்வப்போது, கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிரும் இவர் தற்போது வெட்ட வெளியில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





