"அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல.." - சற்று முன் லீக் ஆன ஹேமந்தின் போன் உரையாடல்..!


சென்னை அருகே நசரத்பேட்டை தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா் நடிகை சித்ரா. இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவா் ஹேமநாத்துடன் தங்கியிருந்தாா். 
 
கடந்த 2020-ம் வருடன் டிசம்பர் மாதம் 9-ம் தேதி புதன்கிழமை அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். 
 
சித்ரா தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் குறித்து அறிய முயற்சித்தபோது, இதில் சித்ராவின் செல்லிடப்பேசியில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
 
இருப்பினும் அந்தத் தகவல்களை மீட்பதற்கு சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் மூலம் காவல்துறையினா் முயன்று வருகின்றனா். அதேவேளையில் சித்ராவின் குடும்பத்தினரிடமும், அவரது கணவா் ஹேமநாத்திடமும் போலீஸாா் தொடா்ந்து 6 நாள்களாக விசாரணை செய்தனா். 
 
 
இந்த விசாரணையில் ஹேமநாத்துடன் சித்ராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததும், அதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதும், ஹேமநாத் சில வேளைகளில் படப்பிடிப்புத் தளங்களிலேயே சித்ராவிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது. 
 
இந்நிலையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் ஹேமநாத்தை, திங்கள்கிழமை நசரத்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து நடத்தப்படும் விசாரணையில் தெளிவு கிடைத்த பின்னா், சித்ரா தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
 
 
இந்நிலையில், சற்று முன் தனது நண்பருடன் சித்ராவின் கணவர்ஹேமந்த் உரையாடும் ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில், ஆமா செல்லக்குட்டி பிரமிஸ் பண்ண மாதிரி இன்னைக்கு அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல அப்படின்னு கேட்டேன். 
 
அப்போ அவ ஆடினேன்னு சொன்னால், எனக்கு கண்ணே கலங்கிடுச்சி. ஏண்டி! இப்படி பண்றன்னு சொன்னேன். வெளிய தம் அடிக்க போனேன் வந்தேன், ஏதோ ஒரு மாதிரியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா?. வெளிய புல்வெளி மாதிரி இருக்கும் அங்க உட்கார்ந்து கூப்பிட்டேன்.


வா சித்துன்னு... இதோ வர்றேன்னு சொன்னவள் டக்குன்னு கதவை மூடிட்டால். திறக்கவே இல்ல. ஜன்னலை தட்டிப்பார்த்தும் திறக்கல. அப்புறம் போய் ரூம் சாவி வாங்கிட்டு வந்து திறந்து பார்த்தால் என் கண்ணு முன்னாடி தொங்குறாடா? என பேசியிருப்பது பதிவாகியுள்ளது. 
 
இதன் மூலம் சித்ரா வேறு ஒரு நடிகருடன் நடனமாடியதால் ஹேமந்துடன் பிரச்சனையானது தெரியவந்துள்ளது.