அடேங்கப்பா.. ரீமா சென்னா இது..? - என்ன இப்படி ஆயிட்டாங்க..! - வைரல் போட்டோஸ்..! - ரசிகர்கள் ஷாக்..!

 
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென் 2012ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 
 
 
ரீமா சென்னுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். குடும்பத்தை மட்டும் கவனித்து வருவதால் ரீமா சென் சினிமா பக்கம் வருவத்தில்லை. நடிகை 'ரீமா சென்'னை தெரியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. 
 
2000 வருடத்தில் நடிக்கத் துவங்கி கிட்டதட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் ரீமா சென். சித்திரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2000 வருடத்தில் நடிக்கத் துவங்கிய அவர் அதற்கு பிறகு தமிழில் மின்னலே படத்தின் மூலமாக அறிமுகமானார். 
 
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான மின்னலே படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது. 
 
அது உண்மையாக இருக்க வேண்டும் என நடிகர் மாதவன் ட்விட்டரில் குரு இருந்ததையும் நாம் பார்த்தோம். அந்த அளவுக்கு ரசிகர்களை மிகவும் வெகுவாக கவர்ந்த படம் அது. அந்த படத்திற்கு பிறகு ரீமா சென் பகவதி, தூள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
அதனை தொடர்ந்து மாதவன் நடித்த ஜே ஜே படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார் ரீமா சென். மே மாசம் தொண்ணுத்தெட்டில்.. என்ற அந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. அந்த காலகட்டத்தில் அந்த பாடலை முணுமுணுக்காதவர்களே இருக்க முடியாது. 
 
 
அந்த அளவுக்கு அதிகம் பேசப்பட்டது அந்த பாடல். அதன் பின் 2010ல் ரீமா சென் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
ரிலீஸ் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுக்கப் போகிறீர்கள் என செல்வராகவனை பலரும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இப்படி தமிழ் சினிமாவில் பல படங்களின் மூலமாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ரீமா சென் 2012இல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 
 
 
அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

 
அவர் தனது மகன் உடன் இருக்கும் போட்டோக்கள், கணவருடன் இருக்கும் பழைய போட்டோக்கள் என பல தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

அடேங்கப்பா.. ரீமா சென்னா இது..? - என்ன இப்படி ஆயிட்டாங்க..! - வைரல் போட்டோஸ்..! - ரசிகர்கள் ஷாக்..! அடேங்கப்பா.. ரீமா சென்னா இது..? - என்ன இப்படி ஆயிட்டாங்க..! - வைரல் போட்டோஸ்..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.