"இந்த வெறி தான் அந்த பயத்துக்கு காரணம்..." - ஓப்பனாக கூறிய சமந்தா..!


தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா கவர்ச்சியாக நடிப்பது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. 
 
இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். 
 
நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றம் இருக்கும். படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும். 
 
இயக்குனர், கேமராமேன் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும். ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி காட்டிக்கொள்ள மாட்டேன். 
 
சமந்தா புதிய நடிகையாக அந்த கதாபாத்திரத்துக்குள் செல்ல வேண்டும் என்ற உணர்வும், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற வெறியும்தான் அந்த பயத்துக்கு காரணம். 
 
பொதுவாக நடிகர், நடிகைகள் படப்பிடிப்புதளத்தில் பயப்பட மாட்டேன். சிங்கிள் டேக்கில் நடித்து விடுவேன் என ஆஹா.. ஓஹோ.. என்று அளந்து விடுவார்கள். ஆனால், சமந்தா நான் பயப்படுவேன் என ஓப்பனாக கூறியுள்ளார்.
 
கடந்த, 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

"இந்த வெறி தான் அந்த பயத்துக்கு காரணம்..." - ஓப்பனாக கூறிய சமந்தா..! "இந்த வெறி தான் அந்த பயத்துக்கு காரணம்..." - ஓப்பனாக கூறிய சமந்தா..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.