90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. நக்மாவை போலவே அவரது தங்கை ஜோதிகாவும் பலரது கனவு கன்னியாக வலம் வந்தார் .
பின்னர் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் தங்களுடைய பணியில் பிஸியாக மாறிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . பின்னர் குடும்ப வாழ்க்கையில் இணைந்த அவர் சினிமா துறையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.
தற்போது மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் நக்மா நடித்த முதல் படம் காதலன். அதில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்தார்.
இணைத்தும் பேசப்பட்டார். பின்னர் ரஜினியின் பாட்ஷா படம்தான் இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சரத்குமாருடன் நிறையப் படங்களில் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார்.
அதேபோல கார்த்திக்குடனும் சில படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக இவர் தமிழில் அஜீத்துடன்தான் நடித்திருந்தார். சிட்டிசன் படம் தான் இவரது கடைசிப் படமாக மாறியது. அதில் சிபிஐ அதிகாரியாக இவர் நடித்திருந்தார்.
அதேபோல தீனா படத்திலும் அஜீத்துடன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். தற்போது , நடிகைகள் பலரும் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு பொழுதைபோக்கி வருகிறார்கள்.
அந்த வகையில், நானும் ஆட்டத்துல இருக்கேன் நடிகை நக்மாவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட சில ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



