"மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்துள்ள ஜாங்கிரி மதுமிதா.." - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்று செல்லமாக சந்தானம் அழைத்ததால், ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். 
 
தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜில்லா’, ‘தெனாலிராமன்’, ‘புலி’, ‘காஷ்மோரா’, ‘விஸ்வாசம்’ உள்பட பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் ஆதரவு அதிகரித்தது.
 
நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய போதும், பிக்பாஸ் வீட்டில் தமிழ்ப் பெண்கள், உடை கலாச்சாரம் என மதுமிதா நடந்து கொண்ட விதத்திற்கு சமூகவலைதளத்திலும் நல்ல ஆதரவு கிடைத்தது.
 
ஒருகட்டத்தில் மதுமிதாவுக்கு சக போட்டியாளர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டார் மதுமிதா. 
 
நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மதுமிதா பேட்டியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மதுமிதா , விஜய் தொலைக்காட்சி இடம் பணம் கேட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்று கூறினார். 
 
இந்நிலையில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‛டிக்கிலோனா' படத்தில் அவர் வக்கிலாக நடித்து வருவது தெரிய வந்துள்ளது. மதுமிதா ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்திருந்தார்.
 
 
இந்நிலையில், ஜீன்ஸ், சர்ட் என மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மதுமிதா. 


பிக்பாஸிற்கு பிறகு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புக்கான வேட்டையில் இறங்கியுள்ளார்.

"மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்துள்ள ஜாங்கிரி மதுமிதா.." - வாயை பிளந்த ரசிகர்கள்..! "மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்துள்ள ஜாங்கிரி மதுமிதா.." - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.