"மெழுகு சிலை.." - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர் அசின். தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 
 
தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி பட இந்தி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்தி திரையுலகிற்கு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அமீர்கானைத் தொடர்ந்து சல்மான் கான், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 
 
அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவின் அறிமுகம் கிடைத்தது. 
 
முதலில் நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 2016ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 
 
அசின் - ராகுல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது செல்லமகள் அரினுக்காக அசின் சினிமாவை விட்டு விலகிவிட்டார். மகளை கவனித்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 
 

 
இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"மெழுகு சிலை.." - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! "மெழுகு சிலை.." - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.