"நீங்களுமா..?" - குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள திவ்யா சத்யராஜ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் மதிய உணவு திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். 
 
அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாடுகளை போக்கவேண்டும் என்று திவ்யா சத்யராஜ், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 
 
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று விவசாய அமைச்சரிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். விரைவில் அவர் புது இயக்கத்தை தொடங்க இருக்கிறார். 
 
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பெண் பாராளுமன்ற உறுபினர்கள் கவர்ச்சியாக ஆடை உடுத்துவது குறித்து அதிரடியாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார் அம்மணி.திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தியும், பசிராத் தொகுதியில் 29 வயது நடிகை நுஸ்ரத்தும் வெற்றிபெற்றனர். 
 
முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள இருவரும் மாடர்ன் உடையில் சென்று தங்களது அடையாள அட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த புகைப்படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டனர். 
 
நவநாகரீக உடையில் ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட் அணிந்து அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
 
ஆனால், பெண் எம்.பி.க்களின் ஆடை விவகாரமாய் சர்ச்சை எழுப்புக்கொண்டிருந்தவர்களை நோக்கி, ’நமது கலாச்சாரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு பாசாங்கு செய்வதை முதலில் நிறுத்துங்கள்’என்று அதிரடியாக கூறியிருந்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. 
 

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா...? அப்புறம் எங்க பார்வையை குத்தம் சொல்ல கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"நீங்களுமா..?" - குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள திவ்யா சத்யராஜ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "நீங்களுமா..?" - குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள திவ்யா சத்யராஜ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 15, 2021 Rating: 5
Powered by Blogger.