இணையத்தில் லீக் ஆன திருச்சி சாதனாவின் அந்தரங்க வீடியோ.. எப்படி லீக் ஆனது தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் சந்தா திட்டம் மூலம் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு பணம் ஈட்டுவதாகக் கூறப்படும் திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி சாதனாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. திருச்சி சாதனா இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர். 

முன்பு ஒருவரை ஒருவர் திட்டிப் பேசியும், பஞ்சாயத்தை இழுத்தும் சர்ச்சையில் சிக்கி சிறை சென்றார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்தார். 

பின்னர் புதிய வீடு கட்டியது சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அதன்பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட்டு வலம் வந்தார்.இப்போது பணம் ஈட்ட புதிய வழியைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமின் சந்தா (சப்ஸ்கிரிப்ஷன்) வசதியைப் பயன்படுத்தி, தன்னுடன் சாட் செய்யும் பயனர்களுக்கு தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதாகத் தகவல். 

சூப்பர் சாட், கோல்ட் சாட், பர்சனல் சாட், சாட்டிஸ்பேக்ஷன் சாட் என வெவ்வேறு நிலைகளில் ரூ.599 முதல் ரூ.16,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

அந்தத் தொகையைச் செலுத்தி சந்தா செய்தவர்களுக்கு மட்டும் அந்த உள்ளடக்கங்கள் கிடைக்கும் என்ற முறையில் இயங்குவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இப்படி பணம் செலுத்தி திருச்சி சாதனாவின் வீடியோவை பெற்ற யாரோ ஒருவர் தான் இந்த காட்சிகளை இணையத்தில் பரவ விட்டிருக்க கூடும் என யூகிக்க முடிகிறது. மறு பக்கம், இது உண்மையான வீடியோ அல்ல, A.I கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கூறப்படுகிறது.

திருச்சி சாதனா மட்டுமின்றி, சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் தனிக் கணக்குகள் வைத்து இதே போன்ற சந்தா திட்டத்தில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்தச் சந்தா திட்டத்தில் வயது வரம்பு இல்லாததால் இளம் வயதினரும் பாதிக்கப்படுவதாகவும், தவறான பாதைக்கு இழுக்கப்படுவதாகவும் சேலம் மாநகர காவல் நிலையத்தில் வழக்கறிஞர் அஜித் சாக்கோ புகார் அளித்துள்ளார். 

தகவல் தொழில்நுட்பச் சட்டம், பொதுவெளியில் தகாத முறையில் பேசுவது, பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிக்கும் செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் திருச்சி சாதனா, தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சந்தா வசதி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது.

Summary in English : Trichy Sadhana and 11 others face a case filed by Salem cyber crime police over Instagram subscription plans offering exclusive photos and videos for a fee. Advocate Ajith Chacko alleged the plans lack age checks and harm young users. Police have registered the case and are working to take them into custody.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.