47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நக்மா - என்ன காரணம் தெரியுமா..?

 
தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. 
 
அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய மைய திரைப்படங்களிலும் நடித்து அதில் வெற்றி வாகையும் சூடுகின்றனர். இதனால் பெரும்பாலான நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கின்றனர். 
 
ஏற்கனவே 30- 40 வயதில் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். 90களில் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நக்மா. 
 

 
நடிகை ஜோதிகாவின் அக்கா இவர். ஜோதிகா குடும்பம், குழந்தை குட்டி என்று செட்டிலாகி விட்டார் . ஆனால், நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் அடம் பிடித்து வருகிறார். 
 
சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அரசியலில் வண்டி ஒட்டி வருகிறார். இவர் திருமணம் செய்துகொள்ளாமல் போனதற்கு காரணமாக இவருடைய காதல் தோல்வியை தான் பலரும் கூறுகிறார்கள். 
 
இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியும் காதலித்தார்களாம். இடையில் இருவருக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு காரணத்திற்காக நக்மாவுடன் இருந்த உறவை கங்குலி பிரேக்கப் செய்ய, பிறகு நக்மா சரத்குமாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தாராம். 


 
ஆனால் சரத் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால், நக்மா சரத்குமார் உறவு பெரும் சர்ச்சையாக வெடித்து பல சர்ச்சைகளை உருவாக்கியது. அதன் பிறகு இதுவரை நக்மா திருமணம் செய்து கொள்லாமலேயே தனியாக வாழ்ந்து வருகிறார் நக்மா. தற்போது, நகமாவுக்கு 47 வயது ஆகின்றது. இவருடைய உண்மையான பெயர் நந்திதா அர்விந்த் மோரார்ஜி என்பதாகும்.

47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நக்மா - என்ன காரணம் தெரியுமா..? 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நக்மா - என்ன காரணம் தெரியுமா..? Reviewed by Tamizhakam on February 14, 2021 Rating: 5
Powered by Blogger.