"நீங்க கட்டி விடுறீங்களா..?" - புடவை கட்டும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி..! - வைரலாகும் வீடியோ..!


கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். 
 
தன்னை பல நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர் என ஸ்ரீரெட்டி கூறிய பட்டியலில், இயக்குநர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என நீளமான பட்டியலை வெளியிட்டு அதிரடி கிளப்பினார். 
 
பட வாய்ப்பிற்காக இப்படி ஸ்ரீரெட்டி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என அவரது குற்றச்சாட்டுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 
 
தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி, தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட தான் பாலியல் புகார் கூறிய ராகவா லாரன்ஸ் உடன் படம் நடிக்க உள்ளதாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். 
 
எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சை மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான நாகார்ஜுனா, சிரஞ்சீவி குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை கிளப்பியது.
 

 
இதனிடையே பட வாய்ப்புக்காக எல்லை தாண்டி கவர்ச்சி காட்ட துணிந்துள்ள ஸ்ரீரெட்டி, புடவை கட்டும் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்.