தமிழ் சினிமாவில் மிக குறுகிய எண்ணிக்கையில் இருக்கும் காமெடி நடிகைகளில் முக்கியமானவர் வித்யுலேகா ராமன். இவர் காமெடி நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
காமெடி நடிகைகளாக நடித்து வரும் நடிகைகளால் கவர்ச்சியாக, செக்ஸியாக காட்சி தர இயலாது என்று நினைக்கும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் என்னால் முடியும் என்று உணர்த்தும் வண்ணம் இந்த கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளேன் என கூறுகிறார் வித்யு ராமன்.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா.அதில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து, தீயா வேலை செய்யணும் குமாரு, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம், வேதாளம், தனுஷின் பவர் பாண்டி, பஞ்சுமிட்டாய் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.
நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார்.
சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் குட்டியான டவுசர் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.



