சாட்டை படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,குற்றம் 23, புரியாத புதிர், மகாமுனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார்.
மேலும் தற்போது, ஐங்கரன், அசுரகுரு, கிட்னா உள்பட ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இந்தியாவில் தற்போது 144 தடை கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், திரைப்பட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது.
எனவே பிரபலங்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்த வகையில் நடிகை மகிமா நம்பியார், தனக்குள் ஒளித்து வைத்திருந்த, ஓவிய திறமையை வெளிப்படுத்தி சமீபத்தில் வெளியிட்டுருந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது.
மேலும், வீட்டில் உடல்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது என பொழுதை போக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் ‘இன்சோம்னியா’ என்கிற தூக்கம் இன்மை பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும்… இதனால், இதனை யோகா மூலம் சரி செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, யோகா , உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறார் அம்மணி. நடிகைகள் என்றாலே, முகத்தில் சூரிய ஒளி முகத்தில் படும் படி போஸ் கொடுத்து சன் கிஸ்டு என்று ஸ்டேட்டஸ் போடுவார்கள்.
ஆனால், மகிமா நம்பியார் சற்று வித்தியாசமாக தொடையில் சூரிய ஒளி படும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.




