வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கிய மைனா, டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் தனது காமெடியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
கணவரை இழந்து சிங்கிளாக வாழ்ந்து வந்த 'மைனா' நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் காதலாக மலர, இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.
யோகேஸ்வரன் 'நாயகி', 'சத்யா' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு ஒரு வீடியோவை அப்லோடியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், மெழுகில் மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.




