"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே.." - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..! - என்ன காரணம்..!


இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 
 
இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார். 
 
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. 
 
தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 
 
இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. 
 
இது ராம் சரணின் 15-வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 
 

என்னா...., குமாரு..., அவசரப்பட்டியே

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் பலரும் இயக்குனர் ஷங்கரை பார்த்து என்னா குமாரு அவசரப்பட்டியே.. என்று கூறி வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் நடிகர் ராம் சரண் இப்போது ராஜமௌலி படத்தில் நடித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து, ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ராஜமௌலியின் இயக்கத்தில் நடித்த நடிகர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.

அதுஎன்னவென்றால், ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களின் அந்த படம் பிரமாண்ட வெற்றி பெரும். ஆனால், அதற்கு அடுத்ததாக வேறு இயக்குனரின் நடிக்கும் படம் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கும்.

இந்தியாவே கொண்டாடும் நடிகராகி விட்டார் என்று பாகுபலி பிரபாஸ்-ஐ கொண்டாடினார்கள். ஆனால், பாகுபலி -2 படத்திற்கு பிறகு அவர் நடித்த படமாக சாhoஹோ-வின் நிலைமை என்ன ஆனது என்று பார்த்தால் தெரியும்.

இத்தனைக்கும் அந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்டது. படம் வெளியாகி படத்தின் தயாரிப்பாளரை ரோட்டில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. 
 
இது இன்று நேற்று நடக்கும் செண்டிமெண்ட் இல்லை ராஜ மௌலி இயக்கிய முதல் படமாக ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் நடித்த ஜூனியர் NTR-ல் இருந்தே தொன்று தொட்டு வரும் ஒரு ஸ்ட்ராங்கான செண்டிமெண்ட்.

இந்நிலையில், ராஜமௌலியின் படத்தை முடித்து விட்டு வரும் நடிகர் ராம் சரணுடன் இணைந்துள்ளார் ஷங்கர். இதனால், தான் ரசிகர்கள் அவசரப்பட்டியே குமாரு என்று கூறி வருகிறார்கள்.

இயக்குனர் ஷங்கரும், ஐ, எந்திரன் 2.0 என இரண்டு சுமார் ரக படங்களை கொடுத்து விட்டு இருக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் கிட்டதட்ட ட்ராப் ஆகி விட்டது என்றே கூறுகிறார்கள்.

கரை சேறுவாரா ஷங்கர்...? பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்..

"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே.." - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..! - என்ன காரணம்..! "என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே.." -  ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..! - என்ன காரணம்..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.