Posts

Showing posts with the label Director Shankar

கேம் சேஞ்சர் படத்துல தினமும் இதை பண்ணாரு.. ஷங்கர் குறித்து திடுக்கிடும் தகவலை கூறிய தயாரிப்பாளர்!

Image
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்விக்கு இயக்குநர் ஷங்கரை நம்பியதே தனது தவறு என வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 58-60 படங்களை இளம் இயக்குநர்களுடன் தயாரித்த தனது அனுபவத்தை குறிப்பிட்ட அவர், முதன்முறையாக பெரிய இயக்குநரான ஷங்கரை நம்பியது தவறு எனக் கூறினார்.  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கரிடம் தொழில்முறை அணுகுமுறை இல்லை என்றும், 4.5 மணி நேர ஃபூட்டேஜை வைத்து படத்தை எடிட் செய்ய சொன்னதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.  இதற்கு பதிலளித்த தில் ராஜு, படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்பதாகவும், சரியான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாததால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.  ராம் சரண், ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றியை எதிர்பார்த்து இப்படத்தில் இணைந்ததாகவும், ஆனால் அவருக்கு வெற்றியோ அங்கீகாரமோ கிடைக்காதது தனக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் தில் ராஜு உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.  ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் கிச்சடி தான் கிண்டிக...

என் மகன் AR முருகதாஸின் Assistant.... என் கூட வச்சிக்க மாட்டேன் ஏன் தெரியுமா?

Image
இயக்குனர் சங்கர்:  தமிழ் சினிமாவில் பிரமாண்ட படைப்பாளியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் சங்கர் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராக இருந்து வருகிறார். இவர் திரைப்படங்கள் பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருட்களில் மிகப்பெரிய நட்சத்திர பிரபலங்கள் வைத்து எடுக்கப்படும். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிவந்தாலே அது மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்துவிடும்.  திரைப்படங்கள் :  1993 ஆம் ஆண்டில் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆன ஷங்கர் தொடர்ந்து காதலன் இந்தியன் , ஜீன்ஸ், முதல்வன், பாஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் ,நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட  பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பெயர் எடுத்திருக்கிறார் . இவரது திரைப்படங்களில் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாகவும் பிரம்மாண்டம் மிக்கவையாகவும் இருக்கும் அதிரடியாக சமூக மாற்று கருத்துக்களை இவரது திரைப்படங்கள் பேசும். அதற்காகவே ரசிகர்கள் இவரது படத்தை விரும்பி பார்ப்பார்கள் . சங்கர் ப...

"என்னா.. குமாரு.., அவசரப்பட்டியே.." - ஷங்கரின் அடுத்த பட ஹீரோ - உச் கொட்டும் ரசிகர்கள்..! - என்ன காரணம்..!

Image
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் அடுத்ததாக இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்.    இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.    பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.    தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.    இயக்குந...

"வா தலைவா.. வா தலைவா... - எவ்வளவு நாள் ஆச்சு உங்கள இப்படி பாத்து..!" - அதிரடிக்கு தயாரான ஷங்கர்..!

Image
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தமிழ் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.    பிரம்மாண்டமாக ஒரு படத்தை எடுப்பது எப்படி என்பதை எப்போதோ ஆரம்பித்தவர். அவரது வழியில்தான் இன்று பல இயக்குனர்கள் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.    'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ராஜமவுலி பக்கம் நகர்ந்துவிட்டது. அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கிய '2.0' படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் அப்படம் 'பாகுபலி' வசூலை நெருங்கக் கூட முடியவில்லை.    தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு பல மொழி நடிகர்கள் நடிக்கும் சரித்திரப் படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.    'பாகுபலி' படங்களின் பிரம்மாண்டத்தையும் மீறும் அளவிற்கு பெரும் பட்ஜெட்டில் அப்படத்தை அவர் உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில்தான் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படத்தை ஷங்கர்...

"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..!

Image
1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள்.  இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல் ஹாசனின் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.  தற்போது கமல் குணமடைந்து சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.  இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா, படப்பிடிப்பு ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள்.இந்த படத்தின் தயாரிப்பு உதவியா...

இந்தியன் 2 விபத்து - இயக்குனர் ஷங்கரின் கால் முறிந்தது குறித்து வெளியான தகவல் உண்மையா..? - இதோ விளக்கம்

Image
இயக்குனர் ஷங்கர் இயங்கிவந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் நசுங்கி இறந்தனர்.  மேலும் இயக்குனர் ஷங்கரின் கால் முறிந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகிறது. கமல்ஹாசன் விபத்து குறித்த வருத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது. இதனால், ஷங்கரின் நிலை என்ன.? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர் தீவிரமாக சிகிச்சை பிரிவில் உள்ளார் என பரவிய தகவல் குறித்து விசாரித்ததில் அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.  விபத்து நடந்த நேரத்தில் இயக்குனர் ஷங்கர் வேறு இடத்தில் லைட் செட்டிங் பார்த்துக்கொண்டிருந்ததால் இந்த விபத்தில் அவர் சிக்கவில்லை. தற்போது ஷங்கர் கமல்ஹாசன் என அனைவரும் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அருகில் இருந்தே கவனித்து வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால், இந்தியன் 2 படப்பிடிப்பு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....

என்ன ஆனது இந்தியன் 2 - வெளியான அப்டேட்..!

Image
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் ஐகான் என்று கூறலாம். ஆனால், சமீப காலமாக அவருக்கு நேரம் சரியில்லை போல இருக்கிறது. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற ஷங்கர் இப்போது ஒரு ஹிட் படத்திற்கு காத்திருக்கிறார்.  இவர் மலை போல நம்பியிருந்த "2.0" திரைப்படம் மோசமான கதை காரணமாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.ஆனால், ஷங்கர் படம் எப்போது வரும் என இந்திய சினிமா ரசிகர்களே காத்திருப்பார்கள். அந்த வகையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார், இப்படம் தொடங்குவதாக கூறி 2 வருடம் கடந்து விட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை. இந்நிலையில், தற்போது லைகாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்கு எல்லாம் சுமூகமாக முடிவு எடுக்க, படம் இந்த மாதமே தொடங்கவுள்ளதாம்.

சும்மாவே விஜய் ரசிகர்கள் பொழந்து கட்டுவாங்க..! - இப்போ சொல்லவா வேணும்..! - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா..?

Image
விஜய்யின் 63-வது படமான "பிகில்" படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கேற்றால் போலா பட வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் தனது சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.  படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றன. இப்படத்தை தொடர்ந்து மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் அடுத்தப்படம் நடிக்கிறார்.  அதை விட, இப்போது பெரிய விஷயம் என்னவென்றால் விஜய்யின் 65வது படத்தின் இயக்குனர் யார் என்பதும் அதில் விஜய் என்னவாக  நடிக்கிறார் என்பது தான். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்யின் எல்லைக்கே கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  அப்படி என்ன கதாபாத்ரத்தில் நடிக்கிறார் என்று கேட்கிறீர்களா..?   ஆம், இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அது முதல்வன் இ...

அஜித் - விஜய்யின் அடுத்த படத்தில் இயக்குனர் - அடிபடும் ஒரே இயக்குனரின் பெயர்..! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Image
நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் உள்ள மார்கெட் மற்றும் ரசிகர்கள் பாட்டாளம் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை.  இவர்களின் கால்ஷீட்டுக்காக பல முன்னணி இயக்குனர்கள் காத்துக்கிடக்கிறார்கள். இந்த இருவரின் படங்களும் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும். பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியில் இந்த இருவரது படங்களும் எளிதாக 100 கோடி என்ற இலக்கை எட்டிவிடுகின்றன. ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் வரும்போதும் வசூலில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், விஜய்யின் 64வது படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.  இந்த நேரத்தில் தான் இருவரின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த இருவரது அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதில் ஒரு பெரிய இயக்குனரின் பெயர் அடிபடுகிறது.  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் தான் அஜித், விஜய்-யின் அடுத்த இயக்குனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இந்த செய்தி குறித்த உண்மை தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Continue Reading...

இரண்டாவது முறையாக ஷங்கர்-விஜய் கூட்டணி.! - அதுவும் இந்த படத்தின் இரண்டாம் பாகமாம்.! - அதிரடி அப்டேட்

Image
தமிழ் சினிமாவின் ஐகான் என்று கூறப்படும் இயக்குனர் ஷங்கரின் மீது யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. அவர் கடைசியாக இயக்கிய "ஐ" மற்றும் "2.0" ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.  இரண்டு படங்களும் தொழில் நுட்ப ரீதியில் பிசிரு கிளப்பினாலும் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், "2.0" படத்தின் கதையே பலருக்கும் பிடிக்க வில்லை. வில்லனை நல்லவனாக காட்டிவிட்டு, அவர் மீது கண்ணீர் விட்டு இறக்கப்படும் அளவுக்கு நல்லவராக காட்டிவிட்டி பிறகு ஹீரோவை வைத்து பழி தீர்ப்பது என்ன நியாயம் என்று புலம்பினார்கள் ரசிகர்கள்.  இது மட்டுமா, எந்திரன் கதை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ளார் ஷங்கர். போதாதென்று, 24-ம் புலிகேசி படத்தில் பணத்தை போட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது படம். வடிவேலுவும் இறங்கி வர மாட்டேன் என்று இருக்கிறார்.  ஷங்கர் மற்றும் சிம்புதேவனும் இறங்கி போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருகிறார்கள். இந்நிலையில், ஷங்கருக்கு ஒரு கம் பேக் படமாக இந்தியன் 2 அமையும் என எதிர்பார்த்தா...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு - தப்பிய தயாரிப்பாளர் சிக்கிய ஷங்கர்

Image
ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம், கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தது. இது ஹாலிவுட்டில் வெளிவந்த ரோபோ படத்தின் சாயலில் உருவான படம். மனிதனால் உருவாக்கப்படும் எந்திர மனிதன், ஒரு கட்டத்தில் மனிதனையே ஆட்டிப்படைக்கிற கதை. இந்த படத்தின் கதை என்னுடயது. நான் எழுதிய ஜூகிபா என்ற கதையை தழுவி படம் எடுத்துள்ளனர், என்று பிரபல எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை எழும்பூர் 13வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கரும், படத்தின் தயாரிப்பாளரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ஜூகிபா கதைக்கும், எந்திரன் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான 420வது பிரிவின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் மட்டும் ரத்து செய்யப்படு...

போடு தகிட தகிட..! - விஜய், விக்ரம், ஷங்கர் இணையும் மெகாபட்ஜெட் படம்.! - அதிரும் கோலிவுட் - ரசிகர்கள் கொண்டாட்டம்

Image
பிரம்மாண்டமாக படம் எடுத்து பழக்கப்பட்ட இயக்குநர் ஷங்கர், சமீபத்தில் நடிகர் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து, பிரம்மாண்டமான 2.0 படத்தை எடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். அந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் கமலை வைத்து, இந்தியன் 2 படத்தை இயக்கினார். இதற்கான படபிடிப்பு, பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடந்தது. இதற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் மேக்கப் மேன்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், இந்தியன் 2 பட சூட்டிங், தொடர்ந்து நடக்கவில்லை. நடிகர் கமல், அரசியல்வாதியாகி, அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டதால், அந்த வேலையைப் பார்க்க அவர் சென்று விட்டார். இதனாலும், பட சூட்டிங் நிறுத்தப்பட்டது. படம் எப்போது, மீண்டும் துவங்கும் என சொல்ல முடியாத நிலையில், இயக்குநர் ஷங்கர் தான் ஏற்கனவே பேசி முடித்து வைத்திருக்கும் நடிகர்கள் விக்ரம் மற்றும் விஜய்யை வைத்து படம் இயக்கும் யோசனைக்கு வந்து விட்டார். இதற்காக, நடிகர் விஜய் மற்றும் விக்ரமிடம் பேசி வருகிறார் ஷங்கர். ஷங்கர் படத்தில் இருவரும் நடிக்க ஒப...