படப்பிடிப்பு தள வீடியோக்களை பகிரும் ""பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் நடிகை ஹேமா..!


விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 
இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார். அவர் இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை தன்னுடைய யுடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
அவர் மேக்கப் போடுவது, சமைப்பது, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி அந்த வீடியோக்களில் அவர் காட்டி வருகிறார். சமீபத்தில் ஹேமா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக எப்படி மேக்கப் போடுகிறார் என்பதை காட்டி இருந்தார். 
 
மேலும் அவரது மேக்கப்பேக் மற்றும் காஸ்மெடிக்ஸ் ஆகியவற்றையும் ஒரு வீடியோவில் அவர் காட்டி இருந்தார்.சீரியலில் நடிக்கிறாரோ இல்லையோ அன்றாடம் இணையத்தில் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
 
இணையத்தில் படு சுட்டியாக வலம் வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.