படவாய்ப்புக்காக இப்படியுமா..? - எல்லை மீறும் பிக்பாஸ் ஜூலி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீராங்கனையாக தமிழக மக்களின் நன் மதிப்பை பெற்றவர் ஜூலி என்பது தெரிந்ததே. 
 
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட சில நாட்களிலேயே அவர் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி ஓவியாவை தேவையில்லாமல் சீண்டி, ஓவியா ஆர்மியின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார். 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது அவர் தனது ஒட்டுமொத்த இமேஜை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. 
 
அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். 
 
ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை. 
 
 
ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
 
இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.வீரத்தமிழச்சி என ஜூலியை பார்த்து மெய் சிலிர்த்த ரசிகர்கள் பலரும் அவரை ட்விட்டரில் மரண பங்கம் செய்தனர். 
 
 
கண்டபடி கமெண்ட் போட்டு தொல்லை கொடுத்த நெட்டிசன்களுக்கு ஜூலியும் பலமுறை அன்பாக சொல்லி பார்த்தார். ஆனால் யாரும் கேட்பதாகவே இல்லை. அதனால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் அடியெடுத்து வைத்துள்ள ஜூலி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 
 
பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலியின் கைவசம் அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு படமும் உள்ளன.
 
இந்நிலையில், சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களைஇணையத்தில் அப்லோட் செய்துஇணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


 
அந்த வகையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள ஜூலியை விளாசும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க.. வாவ்… என்று வாயை பிளக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

படவாய்ப்புக்காக இப்படியுமா..? - எல்லை மீறும் பிக்பாஸ் ஜூலி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! படவாய்ப்புக்காக இப்படியுமா..? - எல்லை மீறும் பிக்பாஸ் ஜூலி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.