"குத்துங்க எசமான் குத்துங்க.." - விதவிதமான எக்ப்ரசன்களை காட்டும் சீரியல் நடிகை தேவிப்ரியா..! - குவியும் லைக்குகள்..!


அத்திப்பூக்கள் தொடரில் போலீஸ் ஆக நடித்து அசத்திய தேவிப்ரியா திடீரென ஜோடி தொடரில் நடனமாடி அசத்தினார். பாசமலர் தொடரில் வில்லி அண்ணியாக அறிமுகமாகி இப்போது பாச அண்ணியாக மாறினார். 
 
திருமண விவகாரத்தில் சிக்கலாகி சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களில் அதிகம் அடிபட்ட தேவிப்ரியா சீரியல் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். இப்போது சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் சீரியலில் பிஸியாகிவிட்டார்.
 
நடிகை தேவிப்பிரியா, நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான். 
 
சின்னத்திரையில் நீண்ட காலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
 
தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் நடிகை தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா.மேலும் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். 
 
அதன் பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். 
 
தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. குழந்தை திருமண விழிப்புணர்வு பற்றிய படத்தில் தான் முதன் முதலில் நடித்தார். 
 
அதுவே இவரது சினிமா வாழ்க்கைக்கு வாசலாக அமைந்தது. ராஜீவ்மேனன் மூலமாக மின்சாரக்கனவு படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வாலி, கனவே கலையாதே, வல்லமை தாராயோ, யாமிருக்க பயேமே என பல படங்களில் நடித்தார். 
 

குத்துங்க எசமான் குத்துங்க

 
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். எந்த வகையில், தற்போது விதவிதமான எக்ப்ரசன்களை கொடுத்து ஒரு குட்டி கதையே சொல்லியுள்ளார். 
 
அதில், நீ Bad என்றால்.. நான் உனக்கு Dad.. 
 
 
உங்களுடன் ஊர் சுற்றுகிறார்.. உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்கள் என்ற காரணத்தினால் மட்டும் அவர்கள் உங்கள் நண்பன் ஆகி விடமாட்டார்கள். 
 
 
எல்லோருமே உங்கள் நண்பன் இல்லை. பலரும் உங்ககளுக்கு முன்னுரிமை கொடுகிறார்கள். ஆனால், நாள் முடிவில் சூழ்நிலை போலியான நபர்களை அடையாளம் காட்டி விடும். அது மிகப்பெரிய படமாக இருக்கும்.

 
குத்துங்க எசமான் குத்துங்க என்று கூறியுள்ளார் அம்மணி. 
 
 
இதனைவைத்து பார்க்கும் போது இவர் மிகவும் நம்பிய ஒரு நபர் இவருக்கு துரோகம் செய்யும் விதமாக அல்லது கஷ்டப்படும் விதமாக எதையோ செய்துள்ளார் என்று தெரிகின்றது. அது யாரா இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"குத்துங்க எசமான் குத்துங்க.." - விதவிதமான எக்ப்ரசன்களை காட்டும் சீரியல் நடிகை தேவிப்ரியா..! - குவியும் லைக்குகள்..! "குத்துங்க எசமான் குத்துங்க.." - விதவிதமான எக்ப்ரசன்களை காட்டும் சீரியல் நடிகை தேவிப்ரியா..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on February 23, 2021 Rating: 5
Powered by Blogger.