"முந்தானை முடிச்சு" டீச்சரை நியாபகம் இருக்கா..? - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
கதை சொல்வதில் நேர்த்தியும் திரைக்கதை ஓட்டத்தில் தெளிவும் இருந்துவிட்டால், மக்களின் மனசுக்கு நெருக்கமான படத்தைக் கொடுத்துவிடலாம்.
அப்படியொரு ’கதை சொல்லி’ அவர். திரைக்கதையில் ஜாலம் காட்டும் மாயெமெல்லாம் இவருக்கு சர்க்கரைப் பாகு. அதனால்தான், மக்களின் மனதிலேயே தனியிடம் கிடைத்தது இவருக்கு.
இதுவரை அந்த இடத்தை வேறு எவருமே அடையவில்லை. அது அவருக்கான இடம்... மனசுக்கும் அவருக்குமான முடிச்சு போட்டிருக்கிற இடம். சாதாரண முடிச்சு அல்ல அது. ‘முந்தானை முடிச்சு’. அந்த முடிச்சுக்கு சொந்தக்காரர்... கே.பாக்யராஜ்.
நான்கைந்து சின்னப்பசங்களுடன் ஊர் சுற்றும் வயசுப்பொண்ணு பரிமளம். ஊருக்கு கைக்குழந்தையுடன் வரும் பள்ளி வாத்தியார். மனைவியை இழந்தவர் என்பது தெரிந்ததும் வருகிற பிரியம்.
அதுவே காதலாகிறது. ஆனால் வாத்தியார் பரிமளத்தைப் புறக்கணிக்கிறார். காதலுக்காக, வாத்தியாரை அடைய எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்.
இதன் உச்சம் இரண்டு. ‘என்னை வாத்தியாரு கற்பழிச்சிட்டாரு’ என்பது முதலாவது. அடுத்தது... ‘எங்கே.. இந்தக் குழந்தையைத் தாண்டச் சொல்லுங்க. நான் ஒத்துக்கறேன்’ என்று வாத்தியார் சொல்ல... பொய்சத்தியம் செய்து குழந்தையைத் தாண்டுவது.
இப்படி கதை விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் கதைக்கு நடுவே வரும் பட்டு டீச்சர் கதாபாத்திரம் பொக்கை விழுந்த பெருசுகளையும் ஜொள்ளு விட வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர், உன்னி மேரி. கமல்ஹாசன், ரஜினி, சிவக்குமார், மம்முட்டி என அப்போதையை முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் ஜோடியாக அவர் நடித்தார்.
அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் அவர் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. தற்போது அவருக்கு 57 வயதாகிறது.
பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
"முந்தானை முடிச்சு" டீச்சரை நியாபகம் இருக்கா..? - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
Reviewed by Tamizhakam
on
February 13, 2021
Rating:
