"என்ன இது.., மண்ட மேல கீரிப்புள்ள படுத்திருக்கு.." - அட்லி வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


பிகில் படத்தை இயக்கிய பிறகு மும்பை சென்று ஷாரூக்கானை சந்தித்த அட்லி, அவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும் அந்த படம் தொடங்குவது குறித்த அப்டேட்டே வெளியாகாமல் இருந்தது. 
 
இந்த நிலையில், தனது 66ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை அட்லிக்கு விஜய் கொடுத்திருப்பதாக கூட ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. 
 
அதையடுத்து ஷாரூக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் அட்லி ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோவை அவரது மனைவியான பிரியா சோசியல் மீடியாவில் வெளியிட்டதை அடுத்து அந்த படம் குறித்து செய்திகள் மீண்டும் புகையத் தொடங்கியது. 
 
இந்த நிலையில், தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாரூக்கான் அதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் மற்றும் அட்லி இயக்கும் படத்திலும் நடிக்கப்போகிறாராம். அந்த வகையில் ஷாரூக்கான் - அட்லி இணையும் படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து தொடங்குவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
 

இந்நிலையில், அட்லி புதிதாக செய்து கொண்டுள்ள சிகை அலங்கர புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன இது மண்ட மேல கீரிப்புள்ள படுத்திருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள்.

"என்ன இது.., மண்ட மேல கீரிப்புள்ள படுத்திருக்கு.." - அட்லி வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "என்ன இது.., மண்ட மேல கீரிப்புள்ள படுத்திருக்கு.." - அட்லி வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 29, 2021 Rating: 5
Powered by Blogger.