"ங்கொக்கா.. மக்கா.. அப்படி ஒரு க்யூட் டா..." - வைரலாகும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியார் புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுதும் நடந்தே சுற்றித்திரியும் தேசாந்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அதற்கேற்றவாறு இந்தப்படத்தில் மஞ்சு வாரியருக்கும் விதவிதமான கெட்டப்புகள் இருக்கின்றதாம். அதில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மஞ்சு வாரியாரின் போஸ்டர் ஒன்றை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 
 
தேசியவிருது பெற்ற சனல்குமார் சசிதரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சு வாரியரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார். 
 
 
கடந்த ஆகஸ்ட் மாதம் மணாலியில் படப்பிடிப்பு நடந்தபோது, இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. இதில், மஞ்சு வாரியார் உட்பட படகுழுவில் பலரும் சிக்கிக்கொண்டனர். 
 
அதன் பின் சில நாட்கள் கழித்து மஞ்சு வாரியார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மா கதாபாத்திரம் மூலம் தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். 
 
 
அசுரன் படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், ''அசுரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் நான் அடிக்கடி சென்னை வந்து செல்வேன். என் மற்ற படங்களின் பணிக்காக வருகை தருவேன். 
 
ஆனால் அசுரன் திரைப்படத்திற்கு பின் சென்னை வருவது ஸ்பெஷலாக இருக்கிறது. என்னை அடையாளம் கண்டுகொண்டு மக்கள் வந்து பேசுகிறார்கள். 
 
தமிழில் நல்ல படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் மலையாளத்தில் படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்த வருடம் இந்த திரைப்படம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 
இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொள்ள பாவாடை சட்டை சகிதமாக வந்திருந்த மஞ்சு வாரியாரின் புகைப்படங்கள் சில இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், ங்கொக்க மக்கா...அப்படி ஒரு க்யூட் டா.. என்று மீம்களை பறக்கவிட்டு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.